மறைமுகமாக சீமானுக்கு ஓட்டு கேட்ட நடிகர் விஜய்!.. என்ன தளபதி இதெல்லாம்!..

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். லியோ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் விஜய் நடித்து வரும் திரைப்படம் கோட்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய பிறகுதான் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கினார்.

vijay bussy anand
vijay bussy anand
Social Media Bar

2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் வரைதான் விஜய் நடிப்பார் என்று பேச்சுக்கள் இருந்து வருவதால் அவர் நடிக்கும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோட் திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று இணையத்தில் வெளியானது.

விசில் போடு என்ற பெயரில் வெளியான இந்த பாடல் அதிகமான அரசியல் கருத்துக்களை பேசும் பாடலாக இருந்து வந்தது. இந்த நிலையில் விசில் போடு பாடலுக்காக வெளியான போஸ்டரில் சீமானின் சின்னமான மைக் சின்னம் இடம் பெற்றிருந்தது.

இதன் மூலம் சீமானுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவிக்கிறார் விஜய் என பரவலாக பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகனும் அதையே பேசியிருப்பது இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.