Connect with us

லோகேஷ் யுனிவர்ஸ் எனக்கு வேண்டாம்!.. விஜய் நிராகரித்ததற்கு இதுதான் காரணம்!..

vijay lokesh

News

லோகேஷ் யுனிவர்ஸ் எனக்கு வேண்டாம்!.. விஜய் நிராகரித்ததற்கு இதுதான் காரணம்!..

Social Media Bar

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவராக லோகேஷ் கனகராஜ் இருக்கிறார். தனது முதல் படமான மாநகரம் திரைப்படத்தில் துவங்கி இறுதியாக வெளியான விக்ரம் வரையில் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து வெற்றிகளை மட்டுமே கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்சமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ திரைப்படத்திற்கு அதிகமான வரவேற்புகள் இருந்து வருகின்றன. ஏனெனில் ஏற்கனவே லோகேஷ் கனகராஜும் விஜய்யும் இணைந்து உருவான மாஸ்டர் திரைப்படம் பெரும் அளவில் வரவேற்பை பெற்றது.

அதனை தாண்டி லியோ படத்தின் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்.சி.யு என்கிற ஒரு விஷயத்தை உருவாக்கியுள்ளார் லோகேஷ். அவரது பல திரைப்படங்களை ஒன்றிணைத்து ஒரு திரைப்படமாக கொண்டு வரும் பணியில் இறங்கி உள்ளார் .

இந்த திரைப்பட வரிசையில் லியோ திரைப்படமும் இருக்குமா என்கிற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் வெகு நாட்களாக இருந்து வருகின்றன. ஆனால் இந்த எல் சி யு விஷயத்தை விஜய்தான் நிராகரித்தார் என கூறப்படுகிறது.

ஏனெனில் விஜய் அவருடைய மேடையை யாருடனும் பங்கிட்டு கொள்ள தயாராக இல்லை என கூறப்படுகிறது. ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தால் அவருக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்கிற மனநிலை கொண்டவர் விஜய். எனவே தான் எல்சியூவில் விஜய் இல்லை என்று பிரபல பத்திரிகையாளர் கோடாங்கி தனது பேட்டியில் கூறியுள்ளார்.

To Top