Tamil Cinema News
எப்போதுமே விஜய்யின் மனைவி அப்படிதான்.. ஓப்பன் டாக் கொடுத்த விஜய்யின் அம்மா.!
சினிமாவில் சாதித்த கையோடு அடுத்து அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். விஜய்யின் அரசியல் பாதையை பொறுத்தவரை கடந்த ஒரு வருடத்திலேயே விஜய் அதிகமாக மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.
ஆரம்பத்தில் விஜய் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போகிறார் என்பதுதான் பலரது கேள்வியாக இருந்தது. ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு தொடர்ந்து விஜய்யின் பேச்சுக்கள் என்பது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் அரசியலுக்காக முற்றிலுமான சினிமாவில் இருந்து விலக இருக்கிறார் விஜய். அதே சமயம் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அடுத்ததாக சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுக்கிறார். இதற்கு நடுவே விஜய்யின் மனைவி சங்கீதா குறித்து விஜய்யின் தாய் ஷோபா பேசியிருக்கிறார்.
அதில் அவர் கூறும்போது ஷோபா மாதிரி பாசத்தை கொட்டி வளர்க்கும் பெண்ணை பார்க்கவே முடியாது. பிள்ளைகள் என்றால் அவருக்கு உயிர். அவளது பாசத்தை நான் என் இரு கண்களால் பார்த்திருக்கிறேன்.
பிள்ளைகள் ஏதாவது வேண்டும் என்று கேட்டால் அதை வேலைக்காரர்களிடம் சொல்ல மாட்டார். அவரே கொண்டு போய் கொடுப்பார். என கூறியுள்ளார் ஷோபா.
