விரைவில் கூட்டம் நடக்கும்.. விஜய் எடுத்த அடுத்த முடிவு..!
தாவெக கட்சியின் தலைவரான விஜய் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் பேசப்படும் ஒரு நபராக கடந்த சில நாட்களாக இருந்து வருகிறார்.
கரூர் மாவட்டத்தில் மக்களை சந்திப்பதற்காக அவர் வந்த சந்திப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் இறந்துள்ளனர் அதனை தொடர்ந்து விஜய் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ குறித்து கூட கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன.
பெரும்பான்மையான மக்கள் ஒரு தலைவனுக்கான பொறுப்பிலிருந்து விஜய் பேசவில்லை என்றும் கூறிவந்தனர். ஆனாலும் கூட விஜய்க்கு ஆதரவுகள் என்பது இன்னமும் குறையவில்லை என்று தான் கூற வேண்டும்.

விஜய் எடுத்த முடிவு:
இந்த நிலையில் விஜய் இன்னமும் மறைமுகமாக கட்சி நிர்வாகிகளுக்கு போன் செய்து பேசி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மாவட்ட சந்திப்பை மீண்டும் தொடர வேண்டும் என்பது விஜயின் எண்ணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்த விஜய் முடிவு செய்து இருப்பதாக ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. தொடர்ந்து விஜயின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே மக்களின் ஆர்வமாக இருந்து வருகிறது.