திரைக்கதை எழுதுவதில் சிக்கல்!.. லைக்காவை வெயிட்டிங் லிஸ்டில் போட்ட விஜய் மகன் சஞ்சய்!.

பிரபலங்களில் வாரிசுகள் சினிமாவிற்கு வருவதும், அரசியலுக்கு வருவதும்  தமிழ்நாட்டில் ஒன்றும் புதிய விஷயமல்ல. அந்த வகையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திரைப்படம் இயக்குவதற்காக தமிழ் சினிமாவில் களத்தில் இறங்கியுள்ளார்.

சஞ்சய் ஏற்கனவே வேட்டைக்காரன் திரைப்படத்தில் நான் அடிச்சா தாங்கமாட்ட பாடலில் வந்திருப்பார். அப்போதே சஞ்சய் சினிமாவில் நடிக்க போகிறாரா என்கிற கேள்வி இருந்து வந்தது. ஆனால் அவர் படிக்க செல்கிறார் அவருக்கு சினிமாவில் விருப்பம் இல்லை என விஜய் கூறியிருந்தார்.

இந்த நிலையில் வெளிநாடு சென்று படித்த ஜேசன் சஞ்சய்க்கு இயக்குனர் ஆவதன் மீது அதிக விருப்பம் ஏற்பட்டது. எனவே படிப்பை முடித்துவிட்டு தாய் தேசம் திரும்பிய ஜேசன் சஞ்சய் தந்தை மூலமாக லைக்கா நிறுவனத்திடம் பேசி ஒரு படத்தில் கமிட் ஆனார்.

Social Media Bar

இந்த நிலையில் படத்திற்கான திரைக்கதை வேலையை அக்டோபர் மாதத்தில் முடித்துவிடுவேன் என லைக்கா நிறுவனத்திடம் கூறியிருந்தார். ஆனால் நவம்பர் மாதமே வந்துவிட்ட நிலையில் இன்னும் சஞ்சய் திரைக்கதையை வழங்கவில்லையே என அவரிடம் கேட்டப்பொழுது டிசம்பர் வரை நேரம் கேட்டுள்ளார் ஜேசன் சஞ்சய்.

என்ன பிரச்சனை என பார்க்கும்போது ஜேசன் சஞ்சய்க்கு தமிழில் எழுதவோ படிக்கவோ தெரியாதாம். இதனால் படத்தின் திரைக்கதையை முழுமையாக ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார். தற்சமயம் அதை தமிழாக்கம் செய்வதற்கு மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரை நியமித்துள்ளனராம். அவர் மொழிப்பெயர்த்த பிறகே திரைக்கதை கிடைக்கும் என கூறியுள்ளாராம் ஜேசன் சஞ்சய்.