தயவு செஞ்சு அதை பண்ணாதீங்க.. ரசிகர்களுக்கு விஜய் வைத்த வேண்டுக்கோள்..!

சமீபத்தில் நடிகர் விஜய் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புக்காக மதுரை விமான நிலையம் வந்திருந்தார். அப்பொழுது அவர் பேசிய சில விஷயங்கள் இப்பொழுது ட்ரண்டாகி வருகிறது. அதில் அவருக்கு வரும் பொழுது நான் எனது வேலைக்காக இப்பொழுது இங்கு வந்து இருக்கிறேன்.

ஜனநாயகன் படத்திற்கான படப்பிடிப்புக்காக செல்ல இருக்கிறேன் அதற்காக தான் இப்பொழுது மதுரை விமான நிலையம் வந்து இருக்கிறேன் இன்னும் சில காலங்களில் மதுரைக்கு நான் வருவேன் வந்து உங்களிடம் எல்லாம் பேசுவேன்.

Social Media Bar

ஆனால் இப்பொழுது நான் படப்பிடிப்புக்காக என்னுடைய சொந்த விஷயத்துக்காக தான் செல்கிறேன். எனவே ரசிகர்கள் என்னை பின்பற்றுவது நான் செல்லும் வேன் பின்னாடியே வருவது இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்வது.

ஹெல்மெட் அணியாமல் வருவது போன்ற விஷயங்களை செய்ய வேண்டும் அந்த மாதிரியான வீடியோக்களை பார்க்கும்போது எனக்கு மிகவும் பதற்றமாக இருக்கிறது என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார் விஜய்.

இதற்கு முன்பு விஜய் அரசியல் காரணமாக சில நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பொழுது இந்த மாதிரி ரசிகர்கள் தொடர்ந்து அவரை பின்பற்றி வருகிறேன் என்று நிறைய பிரச்சனைகளை செய்தனர் அதனாலேயே தற்சமயம் விஜய் இப்படியான ஒரு வேண்டுகோளை வைத்து இருக்கிறார்.