News
விஜய் டிவி-ல பெண்களுக்கு மரியாதையே இல்ல…சிவகார்த்திகேயனும் ஒரு காரணம்… விஜய் டிவிய விடேரிஞ்ச பிரபல தொகுப்பாளினி!
ரியாலிட்டி ஷோ, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாக பிரபலமான விஜய் டிவிக்கு, அதை அழகாக கொண்டு செல்லும் தொகுப்பாளர்களே கூடுதல் பலம். டிடி, பாவனா, பிரியங்கா, ரம்யா, மாகபா, ரக்சன், ஜக்குலின் போன்ற பிரபல தொகுப்பாளர்கள் எல்லாமும் விஜய் டிவி யின் ப்ராடக்ட்டுகள் தான். இதிலிருந்து வெளிவந்து சினிமா, சின்னத்திரை என கலக்குபவர்களும் அதிகம். சந்தானம், சிவகார்த்திகேயனும் இதில் அடக்கம்.
இந்த நிலையில், விஜய் டிவியில் பணியாற்றிய பிரபல விஜே ஒருவர் சிவகார்த்திகேயனுக்கும் தனக்கும் செட்டே ஆகவில்லை எனக் கூறியிருக்கிறார். அதாவது விஜய் டிவியில் டிடி, பாவனா, பிரியங்கா, ரம்யா போன்றோர் தொகுப்பாளினியாக பணியாற்றி இருக்கின்றனர். இதில் பலர் இப்போது விஜய் டிவியில் பணியாற்றாமல் இருக்கின்றனர். அதில் ஒருவர் தான் விஜே பாவனா.
இவர் கடந்த 2017 இல் இருந்து விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சியையுமே தொகுத்து வழங்கவில்லை. இது குறித்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, எங்குமே பெண்களுக்கு மரியாதை கிடைக்கவில்லை எனவும், அவர்களது திறமைக்கும் அங்கீகாரம் கொடுக்கப்படுவதில்லை எனவும் அதனால் தான் விலகியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பாவனா தொகுப்பாளினியாக இருந்தபோது கண்டஸ்டண்டாக இருந்து பின்னர், கோ ஆங்கராக பணியாற்றிய சிவகார்த்திகேயனுடன் தனக்கு செட்டாகவில்லை என்றும் கூறியுள்ளார்.அவர்களுக்குள் சரியான பழக்கம் இல்லாததால் எங்களுக்குள் சிங்க் ஆகவில்லை எனவும் ஆனால், மாகாபாவுக்கும் தனக்கும் நன்றாக செட் ஆகி விட்டதாகவும், மாகாபா டைமிங்கில் பிச்சு உதறுவார் எனவும் மாக்காப்ப்பாவை புகழ்ந்து பேசியுள்ளார் பாவனா.
