Latest News
அந்த படத்தில் வர்ற மாதிரி அவங்களுக்கு தண்டனை கொடு தலைவா!. விஜய்யின் பதிவுக்கு மக்களின் எதிரொலி!.
Vijay: தற்சமயம் சினிமாவை விட்டு அரசியலுக்கு சென்று மக்களுக்கு நன்மைகள் செய்வதே நடிகர் விஜய்யின் ஆசையாக உள்ளது. இதற்காக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கியிருக்கிறார். அது மட்டுமின்றி கருத்து சுதந்திரம் சார்ந்தும் நிறைய விஜய் பாதிக்கப்பட்டுள்ளார்.
சமூகம், அரசியல் குறித்து ஒவ்வொரு முறை பேசும்போதும் அது விஜய்க்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் அவருக்கு பாதுகாப்பு அரணாக அரசியல் கட்சியை உருவாக்கியுள்ளார். பொதுவாக ஊருக்குள் இடியே விழுந்தாலும் அது குறித்து எந்த ஒரு விஷயமும் விஜய் வாயில் இருந்து வராது என கூறுவார்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சனையில் துவங்கி மக்களின் எந்த பிரச்சனைக்கும் விஜய் குரல் கொடுத்தது கிடையாது. கட்சி துவங்கிய பிறகு கூட கட்சி சார்ந்து நிறைய பதிவுகளை விஜய் வெளியிட்டார். ஆனால் பொது மக்கள் பிரச்சனைகளை பேசாமல்தான் இருந்தார்.
கண்டனம் தெரிவித்த விஜய்:
இந்த நிலையில் நேற்று புதுச்சேரியில் பாலியல் துன்புறுத்தல் செய்து சிறுமியை கொலை செய்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் பேசும்போது “புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.
பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜய் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு பதிலளித்து வரும் தளபதி ரசிகர்கள் தெறி படத்தில் வரும் காட்சி ஒன்றை பதிவிட்டு இப்படி தண்டனை கொடுத்தால்தான் சரியாக இருக்கும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்