Connect with us

யாரும் சாப்பிடலையா! ரயிலை நிறுத்தி சாப்பாடு போட்ட விஜயகாந்த்!

vijayakanth

Cinema History

யாரும் சாப்பிடலையா! ரயிலை நிறுத்தி சாப்பாடு போட்ட விஜயகாந்த்!

Social Media Bar

தமிழ் சினிமாவில் அதிகமாக பாராட்டப்பட்ட ஒரு நடிகர். அதே சமயம் அரசியலுக்கு வந்த பிறகு அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளான ஒரு நபர் என்றால் அது நடிகர் விஜயகாந்த் அவர்கள்தான்.

சினிமாவில் பலருக்கும் உதவிக்கரம் நீட்டியவர் விஜயகாந்த். அதுவும் உணவு விசயத்தில் அதிகமாக பாராட்டப்படுபவர் விஜயகாந்த். அவரது திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிகழும்போது அனைவருக்கும் வயிறார அசைவ விருந்து வைப்பவர் கேப்டன் விஜயகாந்த்.

சினிமாவிற்கு அவர் வந்த ஆரம்பக்காலக்கட்டங்களில் துவங்கி எல்லா படங்களின் போதும் இதை கேப்டன் செய்து வந்தார். இதற்காக தனது சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை அளித்தார். இப்படி ஒருமுறை விவேக் மற்றும் விஜயகாந்த சேர்ந்து நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது.

படப்பிடிப்பு முடிவதற்கு தாமதம் ஆனதால் வேலையாட்கள் அனைவரும் சாப்பிடாமலேயே ரயில் ஏறிவிட்டனர். ரயில் போய்க்கொண்டிருக்கும்போதுதான் யாருமே இன்னும் சாப்பிடவில்லை என்கிற விஷயம் கேப்டனுக்கு தெரிந்துள்ளது.

உடனே அடுத்த ஸ்டேஷனில் ரயிலை நிறுத்தினார் கேப்டன். ஆனால் அப்போது மணி இரவு 12 என்பதால் எந்த கடையும் இல்லை. உடனே தனக்கு தெரிந்த பலருக்கும் போன் செய்து அந்த ரயில் நிலையத்திலேயே வேலையாட்களுக்கு உணவை தயார் செய்து வழங்கினார் கேப்டன். இதை விவேக் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

To Top