vijayakanth new

விஜயகாந்தின் அந்த ரூல்ஸ் எல்லாம் எம்.ஜி.ஆர் கூட பின்பற்றியது இல்லை… 100 படங்கள் வரை கூரை குடிசையில் இருந்தவர்!.. இவ்வளவு இருக்கா?..

Cinema History Tamil Cinema News

Vijayakanth : கிராமத்திலிருந்து சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்து பெரும் கதாநாயகனான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். சாதாரண குடும்பத்தில் பிறந்து தமிழ் சினிமாவில் நடிகராக வேண்டும் என்று கனவுகளோடு வந்த விஜயகாந்திற்கு பெரும் கஷ்டப்பட்ட பிறகு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

அந்த கஷ்டப்பட்ட காலங்களில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் விஜயகாந்த். அப்போது சின்ன கதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கு நல்ல உணவு கிடைக்காது. அந்த ஒரு விஷயம்தான் விஜயகாந்தின் வாழ்க்கையை மாற்றி போட்டது. எது ஒன்றுக்கு வேண்டுமானாலும் வாழ்க்கையில் கஷ்டப்படலாம்.

ஆனால் உணவுக்கு கஷ்டப்படக்கூடாது என்பதை முக்கியமான விஷயமாக கருதிய விஜயகாந்த் தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு உணவளிப்பதை முக்கியமான பணியாக கொண்டிருந்தார். பொதுவாக அரசியல் தலைவர்கள் அரசாங்க பணத்தின் மூலமாக மக்களுக்கு நன்மைகள் செய்து தங்களுக்கான ஒரு கூட்டத்தை பெறுவார்கள்.

Vijayakanth
Vijayakanth

ஆனால் தனது சொந்த காசை செலவு செய்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். அவரை குறித்து அவருடன் பணிபுரிந்த தயாரிப்பாளர் ஒருவர் கூறும்பொழுது விஜயகாந்த் குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறியிருந்தார்.

விஜயகாந்த் தனது நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் நடித்து முடிக்கும் வரை படபிடிப்பு நேரத்தில் தங்குவதற்கு என்று ஒரு கூரை குடிசைதான் போட்டு வைத்திருந்தார். அதில் இரண்டு கட்டில்கள் மட்டும் இருக்கும் அந்த கட்டில்களில் அவருடன் கதை விவாதிப்பவர்கள் நண்பர்கள் அனைவரும் அமர்ந்திருப்பர்.

அதில் எங்கு தூங்குவதற்கு இடம் கிடைக்கிறதோ அங்கே விஜயகாந்த் படுத்து தூங்கிக் கொள்வார். இரண்டு ரூபாய்க்கு அதிகமாக சோப்பு வாங்க மாட்டார் அதைவிட உயர்வான சோப்புகளை குளிப்பதற்கு வாங்கி வந்தால் அதற்கு விஜயகாந்த் திட்டுவார். இரண்டு சோப்பிற்கும் என்ன வித்தியாசம் அதையே வாங்கி வர வேண்டியதுதானே என கேட்பார்.

அதைப்போல தன் வாழ்நாள் முழுவதும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு விஜயகாந்த் சென்றதே கிடையாது. எந்த ஒரு விழாவையும் கொண்டாடுவதற்கு அவர் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றது கிடையாது அதேபோல பெரும் நிறுவனங்களின்  ஆடைகளை விஜயகாந்த் போட்டதே கிடையாது.

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் போல நட்சத்திர ஹோட்டலுக்கு செல்லாத விலை உயர்வான ஆடைகளை அணியாத இன்னொரு நடிகர் கிடையாது என்று அவர் கூறியிருந்தார் ஒருவகையில் அது உண்மையும் கூட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கூட அவ்வளவு எளிமையாக இருந்தது கிடையாது என்கின்றனர் மக்கள்.