Cinema History
ரஜினிகாந்தால் பட வாய்ப்பை இழந்த விஜயகாந்த்!.. இப்படி செஞ்சிருக்க கூடாது!..
கருப்பான நடிகர்கள் கூட தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட முடியும் என்பதை முதன் முதலில் தமிழ் சினிமாவில் நிரூபித்தவர் நடிகர் ரஜினிகாந்த். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனில் துவங்கி முத்துராமன் நாகேஷ் என்று அப்பொழுது பெரிதாக இருந்த அனைத்து நடிகர்களும் வெள்ளை நிறத்திலேயே இருந்தார்கள்.
அதனால் கருப்பு நிறத்தில் வரும் ஒரு நடிகன் பிரபலம் ஆகலாம் என்பது யோசிக்க கூட முடியாத ஒரு விஷயமாகதான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு கலர் சினிமா காலகட்டம் வந்த பொழுது கருப்பு நடிகர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.
அதில் ரஜினிகாந்த் பெரும் உச்சத்தை தொட்டார். அதற்கடுத்து நடிகர் விஜயகாந்த் கருப்பு நடிகர் ஆக தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டிருக்கிறார். எனவே நடிப்புக்கு நிறமொரு தடை கிடையாது என்பதை இவர்கள் எல்லாம் நிரூபித்துள்ளார்கள்.

விஜயகாந்த் சினிமாவிற்கு வந்த போது ஆரம்பத்தில் நடிகர் ரஜினியின் நடிப்பை பார்த்து மிகவும் வியந்து போனார். அவரும் ரஜினி மாதிரி சில விஷயங்களை நடித்து பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் அவரை அறியாமலே அவருக்குள் ரஜினியின் நடிப்பு கொஞ்சம் வந்திருந்தது.
இந்த சமயத்தில் திரைப்படத்தில் வாய்ப்பு கெட்டுப் போகும்பொழுது அங்கு நடிக்க சொல்லும் பொழுது ரஜினி மாதிரியே நடித்திருக்கிறார் விஜயகாந்த். அதனை பார்த்ததும் அந்த தயாரிப்பாளருக்கு பெரும் கோபம் வந்துவிட்டது கருப்பாய் இருந்தால் ரஜினி ஆயிடலாம்னு நினைச்சியா உன் நடிப்பு அப்படியே ரஜினி மாதிரிதான் இருக்கு என்று திட்டி அனுப்பிவிட்டார்.
அப்பொழுதுதான் தனக்கென தனி நடிப்பு பாணி இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டார் விஜயகாந்த் அதற்குப் பிறகு அவர் எங்கு நடிக்க சென்றாலும் தனக்கென தனி பாணியை கொண்டு நடிக்க தொடங்கினார்.
