Cinema History
வாலி எழுதுன பாட்டு எனக்கு வேண்டாம்!.. இவன் பாட்டுதான் என் ஆயுள் வரைக்கும் கேட்டுக்கிட்டு இருக்கணும்.. மாஸ் காட்டிய கேப்டன்!.
Vaali and Vijayakanth : தமிழ் சினிமாவிலும் சரி பொது வாழ்க்கையிலும் சரி பலருக்கும் நன்மைகள் பல செய்தவர் நடிகர் விஜயகாந்த். சத்யராஜும் விஜயகாந்தும் போட்டி நடிகர்களாக இருந்த காலகட்டத்திலேயே சத்யராஜை வைத்து விஜயகாந்த் ஒரு படம் தயாரித்துள்ளார் என்றால் அவர் எவ்வளவு நல்லவராக இருந்திருக்க வேண்டும் என்று சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
பலருக்கும் நன்மைகள் செய்தவர் விஜயகாந்த். ராஜ்ஜியம் என்கிற ஒரு திரைப்படம் விஜயகாந்த் நடிப்பில் உருவானது. அந்த திரைப்படத்திற்கு அனைத்து பாடல் வரிகளையும் கவிஞர் சினேகன்தான் எழுதுவதாக ஒப்பந்தமாகி இருந்தது.
ஆனால் அரசியல் சார்ந்து ஒரு பாடல் விஜயகாந்திற்கு அந்த படத்தில் இருந்தது. அதை சினேகன் எழுதுவதை விடவும் கவிஞர் வாலி எழுதினால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தனர் பட குழுவினர். இதனை அடுத்து வாலியிடம் பேசிய பட குழுவினர் ஒரு பாடலையும் தயார் செய்து விட்டனர்.
இந்த நிலையில்தான் சினேகன் பாடல் வரிகளை ஒரு பாடலுக்கு மட்டும் எழுதவில்லை என்று விஜயகாந்திற்கு தெரிகிறது. இதனை அடுத்து சினேகனை உடனே அவர் இருக்கும் ஹைதராபாத்திற்கு வர செய்தார் விஜயகாந்த். அவரிடம் படத்தின் காட்சிகளை கூறி அதற்கு ஏற்ற வரிகளை எழுத சொன்னார்.
அப்பொழுது சினேகன் தமிழன் தமிழன் இவன் தான் தமிழன் என்கிற பாடல் வரிகளை எழுதினார். அதில் கோட்டை முதல் குமரி வரை கட்டு ஒரு மாலை ஏழைகளின் தோழன் என்று போடு அவர் மேல என்று ஒரு பாடல் வரிகளை அவர் எழுதியிருந்தார்.
அது விஜயகாந்திற்கு மிகவும் பிடித்து விட்டது என் ஆயுள் உள்ளவரை இந்த பாடல் வரிகளை நான் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறி சினேகனையும் இதற்காக பாராட்டி இருக்கிறார் விஜயகாந்த். படத்தில் வாலி எழுதிய பாடல் வரவில்லை அதற்கு பதிலாக சினேகன் எழுதிய இந்த பாடல் தான் இடம்பெற்றது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்