Cinema History
அப்ப ரமணாவும் முருகதாஸ் படம் இல்லையா!.. காபி அடிச்ச லிஸ்ட் பெருசா போகுதே!..
தமிழில் ஹிட் படங்கள் கொடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய திரைப்படங்களில் பல திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்தவை.
முக்கியமாக அதில் ரமணா திரைப்படத்தை கூறலாம் ரமணா திரைப்படம் ஏ.ஆர் முருகதாஸுக்கு பெரும் மாற்றமாக அமைந்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கினார் முருகதாஸ்.
ஆனால் அந்த திரைப்படங்கள் எல்லாம் பெரும் சர்ச்சையை கிளப்பின. முருகதாஸ் இயக்கிய கஜினி என்கிற திரைப்படம் ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் நோலன் என்கிற இயக்குனரால் எடுக்கப்பட்ட மொமெண்டோ என்கிற படத்தின் நகல் ஆகும்
இதை அந்த இயக்குனரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டு முருகதாஸை கலாய்த்து இருந்தார். அதேபோல முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படம் இயக்குனர் கோபி நாயனார் அவர்களின் கதை என்று கூறப்படுகிறது. இவர் அறம் என்கிற திரைப்படத்தை இயக்கியவர். அவரது கதையை எடுத்து தான் முருகதாஸ் கத்தி திரைப்படமாக்கினார் என்றும் பேச்சுக்கள் இருந்தன.
இருந்தாலும் முருகதாஸின் இயக்கத்தில் உருவான திரைப்படங்களில் ஒரு மாஸ்டர் பீஸாக ரமணா திரைப்படம் இருந்தது. ஆனால் அதுவும் கூட அவர் கதை கிடையாது என்று கூறியுள்ளார் இயக்குனர் நந்தகுமார்.
இயக்குனர் நந்தகுமார் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தயாரிப்பாளரிடம் பேசி எழுதிய கதைதான் ரமணா படத்தின் கதை. அது படமாக்கப்பட்ட பிறகு படம் வெளியாவதில் நிறைய சிரமங்கள் இருந்தன. ஆனால் அந்த படத்திற்காக வெகுவாக உழைத்து இருந்தார் நந்தகுமார்.
பிறகு அந்த படம் வெளியாகாமலே போய்விட்டது வெகுநாட்கள் கழித்து அதே கதையை முருகதாஸ், ரமணா என்னும் பெயரில் படமாக்கினார். பிறகு இந்த விஷயத்தை அறிந்த விஜயகாந்த் நந்தகுமாருக்கு ஒரு வாய்ப்பை கொடுத்தார். என்னை வைத்து ஏதாவது ஒரு படம் எடுங்கள் என்று அவர் கூறிய பிறகு தேர்தல் அதிகாரியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து நந்தகுமார் எடுத்த திரைப்படம்தான் தென்னவன். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்