Cinema History
முதல் படத்துல சாப்பிடவே விடல! அதுதான் இவ்வளவுக்கும் காரணம்! – விஜயகாந்தின் ஆரம்ப கதை!
சினிமா துறையில் விஜயகாந்தை எப்போதும் ஒரு வள்ளல் என்றுதான் அழைப்பார்கள். அந்த அளவிற்கு துறையில் இருந்த பலருக்கும் அவர் நன்மைகள் செய்துள்ளார்.

முக்கியமாக அவர் படத்தின் படப்பிடிப்பின்போது அனைவருக்கும் நல்ல வகையான உணவை அளித்தவர் விஜயகாந்த். இதுக்குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கார். ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் சின்ன கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார் விஜயகாந்த்.
அப்போது அகல் விளக்கு என்கிற திரைப்படத்திலும் நடித்து வந்தார் விஜயகாந்த். மதிய வேளையில் புளிசாதம், தயிர் சாதம் போன்ற உணவுகள்தான் வேலையாட்களுக்கு வழங்கப்படும். கதாநாயகர்களுக்கு மட்டும்தான் நல்ல உணவுகள் வழங்கப்படும்.
அந்த சமயத்தில் விஜயகாந்த் சாப்பிட அமர்ந்தபோது ஹீரோ வரார் எல்லோரும் வாங்க என கூறி சாப்பிட விடாமல் செய்துள்ளனர் படக்குழுவினர். பிறகு சில வருடங்கள் கழித்து கதாநாயகன் ஆன விஜயகாந்த், தான் உண்ணும் உணவைதான் வேலை பார்க்கும் அனைவரும் உண்ண வேண்டும். எனக்கு ஜூஸ் கொடுத்தால் வேலையாட்கள் எல்லோருக்கும் ஜூஸ் கொடுக்க வேண்டும் என்கிற விதிமுறையை கொண்டு வந்தார்.
அதன் பிறகே தமிழ் சினிமாவில் கீழ் மட்ட ஊழியர்களுக்கும் நல்ல சாப்பாடு போட துவங்கினர்.
