Connect with us

நீங்க என்ன ஆளு? என்ற கேள்விக்கு இயக்குனர் கொடுத்த சவுக்கடி பதில்…

Latest News

நீங்க என்ன ஆளு? என்ற கேள்விக்கு இயக்குனர் கொடுத்த சவுக்கடி பதில்…

cinepettai.com cinepettai.com

SAC And Vijay :  இளைய தளபதி விஜய் தமிழ் திரையுலகத்தில் தற்போதைய பிரபலங்களில் ஒருவர். அவருடைய தந்தை SA சந்திரசேகர். விஜய் கடந்த சில மாதங்களாக மக்களுக்கான நற்பணிகளை செய்துவருகிறார்.

படித்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், இலவச நூலகம் மேலும் ரசிகர் மன்றம் மூலம் பல நல்ல செயல்களை செய்துவருகிறார். இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் எதிர்கால அரசியலுக்கு வருவதால் தான் இவ்வளவு மக்கள் பணிகளை செய்கிறார் என்று பலரும் கூறிவந்த நிலையில் அவரது தந்தை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே விஜய் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளிப்படையாக அறிவித்தார்.

அதனால் விஜய் மற்றும் அவருடைய தந்தைக்குள்ளும் சிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றார் விஜயின் தந்தை.

SA சந்திரசேகர் பிரபல இயக்குனர் மேலும் அவர் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர். ஆனால் விஜய் பிறந்தநாள் மற்றும் நல்ல நாட்களில் எல்லாம் ஆலயம் செல்வது அன்னதானம் வழங்குவது போன்ற பணிகளைச் செய்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்பு ஆலயம் ஒன்றில் அன்னதானம் வழங்கிவிட்டு செய்தி நிருபர்களை சந்தித்தார்.

அவர்கள் மதம் பற்றிய கேள்விக்கு விஜய் 12 ஆம் வகுப்பு சேர்க்கும் போது விண்ணப்பத்தில் “Nationality” இந்தியன் என்றும், “Religion” – இந்தியன் என்றும் “Caste” – இந்தியன் என்றும் பூர்த்தி செய்து கொடுத்ததாகவும், தற்போது விஜய்க்கு 49 வயது ஆகிவிட்டது ஆனால் அவரது சான்றிதழ்களில் மதம், சாதி குறிப்பிடப்படவில்லை “இந்தியன்” என்று மட்டுமே இருக்கும் என்று கூறியிருந்தார்.

விஜய் இதுவரை எந்த படத்திலும் தன்னுடைய முழு பெயரை உபயோகித்தது இல்லை அவருடைய முழுப்பெயர் ஜோசப் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

To Top