Bigg boss vikram: பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாள் முதலே பெரிதாக எதுவும் செய்யாமல், யாருடனும் சண்டையிடாமல் இருந்தப்போதும் கூட தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்தவர் சரவண விக்ரம் . பொதுவாக போட்டியாளர்களை பொறுத்தவரை கொஞ்சம் சோர்வாக இருந்தாலும் அந்த போட்டியாளரை மக்களே ஓட்டு போடாமல் தூக்கி விடுவர்.
ஆனால் விக்ரமை பொறுத்தவரை அவர் இவ்வளவு காலங்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கு முக்கிய காரணம் அந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களே என கூறலாம். ஏனெனில் அவர்கள் அனைவரும் அவர்களுக்குள் இருக்கும் சண்டையின் காரணமாக ஒவ்வொரு முறை எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடக்கும்போதும் அவர்களுக்கு பிடிக்காதவர்களையே நாமினேஷன் செய்தார்கள்.

ஆனால் நாமினேஷனின் போது பெரிதாக விளையாடாதவர்களைதான் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி இவர்கள் சண்டை போட்டுக்கொண்டதால் யாருமே பெரிதாக விக்ரமை நாமினேஷனே செய்யவில்லை. இதன் காரணமாக விக்ரம் பல காலங்களாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வருகிறார்.
இன்னும் சில நாட்களில் பிக்பாஸே முடிவை காண உள்ள நிலையில் இன்று எவிக்சனில் சரவண விக்ரம் எலிமினேட் ஆகிறார் என கூறப்படுகிறது. இவ்வளவு நாள் அவர் அதில் இருந்ததே பெரும் அதிர்ஷ்டம்தான் என கூறப்படுகிறது.