விக்ரம் ட்ரெய்லர் வர லேட் ஆகுமாம்.! – அனிருத் குடுத்த அப்டேட்!

பிரபல தமிழ் நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனமே தயாரித்துள்ளது.

Social Media Bar

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். முதற்கட்டமாக விக்ரம் படத்தின் “பத்தல.. பத்தல” பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இன்று விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்து வருகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பட்டியலை வெளியிட்டுள்ள அனிருத் படத்தின் ட்ரெய்லர் 7 மணிக்கு வெளியாகும் என முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது 7 மணிக்கு ட்ரெய்லர் ரிலீஸ் ஆகாது என்றும் ஒரு மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.