டான் ரிலீஸ் – திரைப்படத்தை பார்த்து கண்ணீர் விட்ட இயக்குனர்

சின்னத்திரை வழியாக வந்து வெள்ளித்திரையில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்.
மக்களை நகைச்சுவை மூலம் சிரிக்க வைத்த சிவகார்த்திகேயன் பிறகு அதையே தனக்கான தனி திறமையாக மாற்றி நடிக்கும் கதைகளிலும் கூட தன்னை ஒரு காமெடி கதாநாயகனாக மாற்றிக்கொண்டு வெற்றி பெற்று வருகிறார்.


வரிசையாக வந்த நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயர் சொல்லும் படங்களாக அமைந்த நிலையில் டான் திரைப்படம் எப்படி இருக்கும் என்று பொதுவாக பேச்சு இருந்தது.


தற்சமயம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது டான் திரைப்படம். இயக்குனர் சிபி சக்ரவர்த்திக்கு இது முதல் படமாகும். இந்த திரைப்படத்திற்காக அவர் வெகுவாக உழைத்து உள்ளதாக சிவகார்த்திகேயன் டான் இசை வெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் திரையரங்கில் டான் திரைப்படத்தை காண சிபி சக்ரவர்த்தி சென்றுள்ளார்.

அங்கே அவரது பெயர் திரையில் வரும்போது அதை கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்துள்ளனர். இதை கண்ட சிபி சக்ரவர்த்தி ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.

தனது கனவு நினைவானது குறித்து பெருமகிழ்ச்சி கொண்ட சிபி சக்ரவர்த்தி, இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

Refresh