மார்வெல் மாதிரி நிறைய ஹீரோஸ்..! – பக்கா ப்ளான் போட்ட பிரசாத் நீல்!

பிரபல கன்னட இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து கடந்த 2018ம் ஆண்டில் வெளியான படம் கேஜிஎஃப்.

KGF 2

இந்த படம் அப்போதே பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. சமீபத்தில் கேஜிஎஃப் 2 வெளியான நிலையில் முதல் பாகத்தை விட பெரும் வரவேற்பு பெற்றதுடன், உலக அளவில் ஆயிரம் கோடிக்கு மேல் கலெக்சனை அள்ளி சாதனையும் படைத்துள்ளது.

அடுத்ததாக கேஜிஎஃப் சேப்டர் 3 க்கான கிரெடிட் படத்தில் வைக்கப்பட்டிருந்ததால் அந்த படம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

கேஜிஎஃப் சேப்டர் 3 பற்றி பேசிய அப்படத்தின் தயாரிப்பாளர் “கேஜிஎஃப் சேப்டர் 3க்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும். படம் 2024ல் வெளியாகும். மேலும் மார்வெல் யுனிவர்ஸ் போல இதில் பல புதிய ஹீரோக்களை இணைத்து புதிய யுனிவர்ஸாக மாற்ற திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Refresh