விக்ரம் படத்துல சூர்யாவுக்கு இந்த ரோலா?? – எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விக்ரம்!

உலகநாயகன் கமல் நடித்து தயாரிக்கும் திரைப்படம் விக்ரம். கமலின் வெறித்தனமான ரசிகர் லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கமலை திரையரங்கில் பார்க்கப்போவதால் கமல் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இத்திரைப்படத்திற்காக காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீடு மே 15 அன்று நடைபெற்றது.

தென் இந்தியாவில் இருந்து தொடர்ந்து கேஜிஎப், புஷ்பா, RRR போன்ற பேன் இந்தியா திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. நேற்று வெளியான விக்ரம் திரைப்படம் இப்பட்டியலில் தன்னை இணைத்துக் கொள்வதாகவே தெரிகிறது. மேலும் இதில் மிக சுவாரசியமான ஒரு விஷயத்தை இயக்குனர் லோகேஷ் நேற்று வெளியிட்டார். அது இத்திரைப்படத்தில் சூர்யா நடிக்கிறார் என்பதே ஆகும்.

இத்தகவல் வந்தது முதல் தமிழ் திரையுலகமே பரபரப்பானது. விக்ரமில் இவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்? ட்ரைலரில் அவர் சம்பந்தபட்ட காட்சிகள் இருக்கிறதா என்றெல்லாம் ரசிகர்கள் தேட துவங்கினர்.

ட்ரைலரிலும் சில துணுக்கு காட்சிகளில் அவர் இடம் பெற்றதுபோல் தெரிகிறது. ஆனால் அவரது முகம் எங்கும் காண்பிக்கப்படவில்லை. இந்நிலையில் திரைத்துறையில் இரண்டு விதங்களில் இத்திரைப்படத்தில் சூர்யா இருக்கலாம் என பரவலாக பேசப்படுகிறது.

ஒன்று விக்ரம் திரைப்படத்தின் பாடல்களில் ஒரு தந்தை மகன் பாடல் ஒன்று உள்ளது. மிகவும் உணர்வுப்பூர்வமான இப்பாடலை வைத்து பார்க்கும்பொழுது கமல் ஹாசனுக்கு மகனாக சூர்யா நடிக்க வாய்ப்புண்டு என பலரால் கிசுகிசுக்கப்படுகிறது.

Vikram

இரண்டாவது கமலின்  நிமிட பிளாஸ்பேக் காட்சிகள் இத்திரைப்படத்தில் இருக்கிறது. இதற்காக வயதை குறைத்துக் காண்பிக்கும் தொழில்நுட்பம் (DE Aging Technology) முறையில் கமலை வைத்து அக்காட்சிகள் படம் பிடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் வந்திருந்த சிரஞ்சீவி, ராம் சரண் திரைப்படத்தில்க்கூட இத்தொழில்நுட்பம் பயன்படுத்த பட்டிருந்தது. ஆனால் திரையில் அது மோசமாகவே இருந்தது. இதனால் பலரும் விக்ரம் திரைபடத்தில் இது எப்படி வருமோ என கவலை தெரிவித்திருந்தனர்.

இப்போது விக்ரம் படத்தில் சூர்யா இருக்கிறார் என்பதை பற்றி தகவல் வரும்போதே அதனுடன் சூர்யா கமலின் இளவயது கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது திரையுலகில் பலராலும் பேசப்படுகிறது. இவ்வாறு இருக்கும்பட்சத்தில் ரசிகர்களுக்கு திரையரங்கில் ஒரு வெறித்தனமான படம் காத்திருக்கிறது என்பது உறுதி.

Refresh