Connect with us

இந்தியன் 2 படம் கண்டிப்பா ஓடாது!.. விஷால் வயிறெரிச்சலோடு சொல்ல காரணம் இதுதான்!..

vishal kamalhaasan

News

இந்தியன் 2 படம் கண்டிப்பா ஓடாது!.. விஷால் வயிறெரிச்சலோடு சொல்ல காரணம் இதுதான்!..

Social Media Bar

Indian 2: விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இயக்குனர் ஷங்கர் இயக்கிய திரைப்படத்திலேயே மிகவும் பிடித்த படம் என்னவென்று கேட்டால் அதிகமான ரசிகர்கள் சொல்லும் பதில் இந்தியன் அல்லது முதல்வன் திரைப்படமாகதான் இருக்கும்.

இந்தியன் திரைப்படம் வெளியான சமயத்திலேயே பெரும் வரவேற்பை கொடுத்தது. அந்த படத்தின் இறுதியில் இந்தியன் என்கிற சேனாபதி கதாபாத்திரம் தப்பிவிட்டதாக கதை முடியும். அதனை அடிப்படையாக கொண்டு அடுத்து ஷங்கர் தற்சமயம் எடுத்து வரும் திரைப்படம் இந்தியன் 2.

இந்த படம் குறித்து பரபரப்பான தகவல் ஒன்றை கூறியுள்ளதாக பிரபல பத்திரிக்கையாளரான அந்தனன் கூறியுள்ளார். அதாவது இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி வெற்றியடையக்கூடாது என கூறியுள்ளாராம் விஷால்.

இதற்கு என்ன காரணமென்றால் பண ரீதியாக விஷாலுக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் இடையே ஏதோ தகராறு இருந்து வருகிறது. இதனையடுத்து லைக்கா நிறுவனத்தின் மீது வழக்கு போட்டுள்ளார் விஷால். லைக்கா நிறுவனம்தான் இந்தியன் 2 திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

எனவே இந்தியன் 2 திரைப்படம் ஓடாமல் போனால் லைக்கா இந்தியாவை விட்டே போக வேண்டியதுதான் என கூறினாராம் விஷால். ஆனால் உண்மையில் தமிழ்நாட்டில் பெரும் தயாரிப்பு நிறுவனமாக லைக்கா இருந்து வருகிறது. மேலும் இந்தியன் 2 திரைப்படம் ஓடாமல் போவதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என கருத்து தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்.

To Top