Connect with us

கேப்டன் அலுவலகத்தில் செய்த வேலை… அசந்து போன விஷால்.. அதான் விஜயகாந்த்!..

Cinema History

கேப்டன் அலுவலகத்தில் செய்த வேலை… அசந்து போன விஷால்.. அதான் விஜயகாந்த்!..

Social Media Bar

தமிழ் திரை நடிகர்களில் செல்வாக்கு மிக்கவரும் மக்கள் மத்தியில் மாறா அன்பை பெற்றவருமாக இருப்பவர் கேப்டன் விஜயகாந்த். சமூக வலைத்தளங்கள் எல்லாம் வளர்ந்து திரைத்துறையினர் பேச துவங்கிய பிறகுதான் விஜயகாந்த் எவ்வளவு நன்மைகள் செய்தார் என்பது பலருக்கும் தெரிய துவங்கியது.

விஜயகாந்த் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தப்போது பல நன்மைகளை செய்துள்ளார். நடிகர் விஷால் ஒரு பேட்டியில் கூறும்போது விஜயகாந்த் செய்த நன்மைகளை பார்த்துதான் நானும் அதே போலவே அனைவருக்கும் நன்மைகளை செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன் என கூறியுள்ளார்.

விஜயகாந்த் அவரது அலுவலகத்தில் நான்கு சமையல்காரர்களை வேலைக்கு வைத்தாராம். யார் உணவு கேட்டு வந்தாலும் அவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.

அதுதான் அந்த சமையல்க்காரர்களுக்கு விஜயகாந்த் அளித்த வேலை. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விஷால், அவரும் கூட தனது அலுவலகத்தில் சமையல்காரர்களை பணியில் அமர்த்தி பசியென வருபவர்களுக்கு உணவளிக்குமாறு கூறியுள்ளார்.

To Top