Movie Reviews
படம் முழுக்க ரத்த களரியா!.. எப்படியிருக்கு ரத்னம் திரைப்படம்!..
விஷால் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம்தான் ரத்னம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். நடிகை ப்ரியா பவானி சங்கர் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தை பொறுத்தவரை வழக்கமான ஹரியின் திரைப்படத்தை போலதான் இதுவும் இருக்கிறது. ஏற்கனவே விஷால் ரவுடியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஊருக்கு ஒரு நேர்காணலுக்காக வருகிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

இந்த நிலையில் வழக்கம் போல கதாநாயகியை வெட்டுவதற்கு ஒரு மர்ம கும்பல் வருகிறது. வழக்கம் போல ஹீரோவும் கதாநாயகியை காப்பாற்றுகிறார். கதாநாயகியை துரத்தி வந்த அந்த மர்ம கும்பல் யார் அவர்களை எப்படி கதாநாயகன் முறியடிக்க போகிறார் என்பதுதான் படத்தின் கதையாக இருக்கிறது.
இதற்கு முன்பு ஹரி இயக்கிய வேல், தாமிரபரணி படங்களோடு ஒப்பிடுகையில் இது சுமாரான திரைப்படமாகதான் இருக்கிறது. ஆனால் படம் முழுக்க சண்டை காட்சிகள் நிரம்பி இருப்பதால் சண்டை காட்சிகள் பிடிக்கும் என்பவர்கள் இந்த படத்திற்கு செல்லலாம். வழக்கமான ஹரி படத்தில் இருந்து இதில் மாற்றமாக இருப்பது அந்த 6 நிமிட சிங்கிள் ஷாட் காட்சிகள்தான் என்கின்றனர் ரசிகர்கள்.
