Tamil Cinema News
இந்த புது பணக்காரய்ங்க தொல்லைதான் தாங்க முடியல..! இர்ஃபானை விளாசிய வி.ஜே பார்வதி.!
முன்பு சினிமா பிரபலங்கள் சர்ச்சைக்கு உள்ளாவதை போலவே இப்பொழுது எல்லாம் youtube பிரபலங்கள் அதிகமாக சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றனர்.
அப்படியாக சர்ச்சை ஆகும் பிரபலங்களில் முக்கியமானவராக இர்ஃபான் இருந்து வருகிறார். உணவு குறித்த விமர்சனங்களை வழங்கி வந்த இர்ஃபான் இப்பொழுது அவரது சேனலில் பலதரப்பட்ட வீடியோக்களை பதிவிட்டு வருகிறா.
இந்த நிலையில் சமீபத்தில் ரம்ஜானை முன்னிட்டு இர்பான் வெளியிட்ட வீடியோ அதிக சர்ச்சைக்கு உள்ளானது. ரம்ஜானை முன்னிட்டு ஏழை மக்களுக்கு ஆடையும் பணமும் கொடுக்கிறேன் என்று காரில் சென்ற இர்ஃபான் அங்கு அந்த மக்களை மிகவும் அவமதித்து பேசி இருந்தார்.
அந்த வீடியோவை பார்த்து பலரும் கோபமடைய துவங்கினர். இந்த நிலையில் இதுகுறித்து இர்பானின் தோழியான வி.ஜே பார்வதியே எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்திருக்கிறார். அதில் வி.ஜே பார்வதி கூறும் பொழுது காருக்குள் இருந்து கொண்டே தானம் வழங்குவது என்ன நாகரிகம் என்று தெரியவில்லை.
மனைவியை அவ்வளவு பாதுகாக்கிறீர்கள் என்றால் எதற்கு அவர்களை கூட்டிக் கொண்டு வர வேண்டும். இந்த மாதிரி எல்லாம் செய்யாதீர்கள் ரத்தன் டாட்டா மாதிரியான பணக்காரர்களின் கதைகளை படியுங்கள் அவ்வளவு லட்சங்களில் உதவி செய்த ரத்தன் டாட்டாவே பெரிதாக அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
ஆனால் இந்த புது பணக்காரர்களின் தொல்லை தான் தாங்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார் விஜே பார்வதி.
