Tamil Cinema News
அன்புக்காக ஏங்கும் விஜய் டிவி பிரபலம்! குழந்தைக்காக கண் கலங்கிய பரிதாபம்!
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், பிபி ஜோடிகள் உள்ளிட்ட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் யூடியூப் சேனல் ஒன்றிக்கு அளித்துள்ள பேட்டியில், தனிப்பட்ட வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்தும், தனது ஆசை குறித்தும் கண்கலங்கி பேசி உள்ளார்.
விஜய் டிவி நடத்தும் மேடை நிகழ்ச்சிகள், பிரபலங்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள் என பலவற்றையும் தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, சொந்தமாக யூட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில், சமையல் வீடியோக்கள், வெளிநாடு சென்ற வீடியோக்கள் உள்ளிட்ட பல வீடியோக்களை தொடர்ந்து அப்லோட் செய்து வருகிறார்.
இந்த நிலையில், பிரியங்கா தேஷ்பாண்டே யூடியுப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தன் தம்பிக்கு குழந்தை பிறந்து இருக்கிறது அவள் தான் என் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறாள். அவள் தான் எல்லாம், அவளுக்காக நான் எதுவேண்டுமானாலும் செய்வேன், அந்தை என்ற உறவைத்தாண்டி அவள் மீது அதிக அன்பு வைத்து இருக்கிறேன். அன்புதான் எல்லாம், அன்புக்காக நான் ஏங்கிக் கொண்டு இருக்கிறேன். எனக்கு அன்பு கொடுத்தால் போதும், அவர்களுக்கு நான் இரண்டு மடங்கு அன்பை திருப்பி கொடுப்பேன் எனக் கூறியுள்ளார்.
மேலும்,வாழ்க்கையில் நான் தவறு செய்துவிட்டு நின்ற போது எனக்காக ஒட்டுமொத்த குடும்பத்தையும் எதிர்ந்து நின்ற அம்மாவை எப்போதும் சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அவர் தலைகுனியும்படி எந்த செயலையும் செய்துவிடக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் எனவும் எமோஷனல் ஆக கூறியுள்ளார்.
என்னை ஏமாற்றாதது என் தொழில் மட்டும் தான் எனவும் என் வேலையை மிகவும் நேசிப்பதாகவும் நான் மேடை ஏறி மைக்கை பிடித்துவிட்டால், என்னுடைய அனைத்து பிரச்சனையும் மறந்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.
அப்போது தொகுப்பாளினி அர்ச்சனா, நீ நினைத்தபடி உன்னை உருகி உருகி காதலிக்கும் ஒருத்தர் உன் வாழ்க்கையில் நிச்சயம் வருவார், நீ நிறைய குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்ல, அழுகையை அடக்க முடியாத பிரியங்கா அங்கே கண் கலங்கி அழுதார். இதைப்பார்த்த பிரியங்கா ஆர்மி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.