Connect with us

இயக்குனருக்காக நடந்தே வீட்டிற்கு சென்ற விஜயகாந்த்!.. அந்த மனசுதான் சார் கடவுள்…

Cinema History

இயக்குனருக்காக நடந்தே வீட்டிற்கு சென்ற விஜயகாந்த்!.. அந்த மனசுதான் சார் கடவுள்…

Social Media Bar

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விஜயகாந்த். விஜயகாந்த் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அவரது திரைப்படங்கள் யாவும் வரிசையாக ஹிட் கொடுத்து வந்தன. ஒரே வருடத்தில்  பல படங்களில் நடித்தார் விஜயகாந்த்.

அதே போல திரை துறையில் உள்ள பலருக்கும் பல நன்மைகளை செய்துள்ளார் விஜயகாந்த். ஆனால் மிக தாமதமாகதான் அந்த விஷயங்கள் வெளியில் தெரிந்தன. அப்படி ஒரு நிகழ்வை இயக்குனர் ஆர்.கே செல்வமணி தனது பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

விஜயகாந்தின் வீட்டிற்கு பக்கத்து வீட்டில்தான் ஆர்.கே செல்வமணி குடியிருந்தார். விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருந்தப்போது ஆர்.கே செல்வமணி வீடு கட்டி கொண்டிருந்தார். எனவே செங்கல் ஜல்லி போன்ற பொருட்களை கொட்டி வைத்ததில் விஜயகாந்த் அவரது வீட்டிற்கு செல்ல முடியாத அளவிற்கு சாலை அடைப்பட்டது.

இந்த நிலையில் இரவு 12 மணியளவில் வீட்டிற்கு வந்த விஜயகாந்த் ரோடு அடைப்பட்டு இருப்பதை பார்த்து இரண்டு முறை ஹாரன் அடித்து பார்த்தார். ஆனால் யாரும் வரவில்லை என்றதும் அங்கேயே ஓரமாக காரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு நடந்தே சென்றுள்ளார். ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருந்தப்போதும் சிம்பிளான மனிதராகவே விஜயகாந்த் இருந்துள்ளார்.

To Top