Tamil Cinema News
ஃபாஸ்ட் புட் மாதிரி என்னத்தையோ கொடுக்குறானுங்க.. ரஜினி படம் குறித்து வெளிப்படையாக கூறிய இயக்குனர்..!
தமிழ் சினிமா முந்தைய நிலையில் இருந்ததைவிட இப்பொழுது எவ்வளவோ மாறி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தை தயாரிக்க ஆகும் செலவு என்பது மிக குறைவாகவே இருந்தது.
ஆனால் இப்பொழுது எல்லாம் பல கோடிகள் இருந்தால் தான் திரைப்படங்கள் எடுக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் வெற்றி வாகை சூடி வந்த ஏ.வி.எம் மாதிரியான நிறுவனங்களே கூட இப்பொழுது படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டன.
பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்து வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து தனது கருத்தை கூறியிருக்கிறார் இயக்குனர் வி சேகர்.
இயக்குனர் வி சேகர் கூறும் பொழுது அந்த காலத்தில் ரஜினிகாந்த் திரைப்படங்களின் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. அவரது நடிப்பில் வந்த முள்ளும் மலரும் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் மிக முக்கியமானவை.
ஆனால் இப்பொழுது வரும் அவரது திரைப்படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் இருப்பதில்லை. ஃபாஸ்ட் புட்டை கிண்டி கொடுப்பது போல ஏதோ ஒன்றை கிண்டி கொடுத்து விடுகிறார்கள். ஆனால் கார்ப்பரேட் முதலாளிகள் உள்ளே புகுந்து விட்ட காரணத்தினால் படத்தின் தயாரிப்பு செலவு மட்டும் அதிகரித்துவிட்டது என்று கூறியிருக்கிறார் வி சேகர்.
