Tech News
வாட்ஸாப் செயலியில் வந்த புது அம்சம்… இனிமே அந்த விஷயத்துக்கு பயப்பட தேவையில்லை.!
மிக பிரபலமாக மக்கள் மத்தியில் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸாப் மிக முக்கியமான செயலியாக இருந்து வருகிறது. தொடர்ந்து மெசேஜ், வீடியோ கால் என பல விஷயங்களை செய்வதற்கு இப்போது வாட்ஸாப்தான அனைவரும் பயன்படுத்தும் விஷயமாக இருக்கிறது.
வாட்ஸாப்பில் தொடர்ந்து பயனர்களை கவர்வதற்கு கவர்ச்சிக்கரமான விஷயங்களை சேர்த்து கொண்டே வருகின்றனர். ஏற்கனவே ஸ்டேட்டஸ்களுக்கான நேரம் மாதிரியான அம்சங்களை வாட்ஸாப்பில் சேர்த்துள்ளனர்.
அதே மாதிரி கூகுள் பே மாதிரியான யு.பி.ஐ அம்சத்தை கூட சமீபத்தில் சேர்த்திருந்தனர். அதே போல ஸ்டேட்டஸ்களுக்கு லைக் போடும் வசதியும் கூட சமீபத்தில் சேர்க்கப்பட்டது.
இந்த நிலையில் மெயில்களில் இருப்பது போலவே ட்ராஃப்ட் முறை தற்சமயம் வாட்ஸாப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாம் யாருக்காவது மெசேஜ் அனுப்புகிறோம் என்றால் அதை டைப் செய்து கொண்டிருக்கும்போதே ஒரு போன் வருகிறது பேசுகிறோம் என்றாலோ அல்லது தவறுதலாக வாட்ஸாப் க்ளோஸ் ஆகி விட்டாலோ அந்த மெசேஜ் டெலிட் ஆகிவிடும்.
திரும்பவும் முதலில் இருந்து எழுத வேண்டி இருக்கும். ஆனால் இப்போது ட்ராஃப்ட் முறை மூலம் நாம் எழுதிய மெசேஜ் ஆனது வாட்ஸாப் க்ளோஸ் ஆனாலும் கூட அப்படியே எழுதப்பட்ட நிலையில் இருக்கும். இது பயனர்களுக்கு ஒரு பயனுள்ள வசதியாக இருக்கும்.
