Actress
இட்டாச்சி உச்சிஹா கதாபாத்திரத்தில் நடித்தது யார்?
தமிழ் அனிமே விரும்பிகள் மத்தியில் பிரபலமான ஒரு கதாபாத்திரமாக இட்டாச்சி உச்சிஹா கதாபாத்திரம் இருக்கும். நருட்டோ அனிமேவில் வரும் மிக சக்தி வாய்ந்த ஒரு நிஞ்சாவாக இட்டாச்சி உச்சிஹா இருக்கிறார்.
நருட்டோவின் பாதி கதை வரை இட்டாச்சி ஒரு வில்லனாகதான் சித்தரிக்கப்படுகிறார். அகாட்சுகி என்னும் கேடு விளைவிக்கும் குழுவில் சேர்ந்து பல கெடுதல்களையும் செய்து வருகிறார்.
ஆனால் தாமதமாகதான் அவர் நல்லவர் என்பது அவரது தம்பியான சாசுக்கே உச்சிஹாவிற்கே தெரிகிறது. மேலும் த க்ரேட் நிஞ்சா வாரில் இட்டாச்சியின் பங்கு மிக முக்கியமானது.
இந்த நிலையில் இட்டாச்சி உச்சிஹாவிற்கு குரல் யார் கொடுத்தது என்கிற கேள்வி பலருக்கும் இருந்து வந்தது. அந்த குரல் இளம் ஆணின் குரல் போல தெரிந்தாலும் Hideo Ishikawa என்கிற கொஞ்சம் வயதான நபர்தான் இட்டாச்சிக்கு குரல் கொடுத்துள்ளார்
