Tamil Cinema News
ஹாரிஸ் ஜெயராஜை விட்டு விலகியதற்கு இதுதான் காரணம்.. ஓப்பன் டாக் கொடுத்த கௌதம் மேனன்.!
தமிழ் சினிமாவில் சில இயக்குனர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் இடையே நல்ல தொடர்பு என்பது இருக்கும். உதாரணத்திற்கு ராஜ்கிரண் தயாரித்து நடிக்கும் பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசையமைப்பாளர்.
அதேபோல இயக்குனர் ஷங்கர் தயாரிக்கும் பெரும்பான்மையான திரைப்படங்களுக்கு ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைப்பார். அந்த வரிசையில் இயக்குனர் கௌதம் மேனன் தயாரிக்கும் படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைப்பார்.
ஆனால் சமீப காலங்களாகவே ஹாரிஸ் ஜெயராஜ் அவரது திரைப்படங்களில் இசையமைக்கவில்லை. இந்த நிலையில் இது குறித்து கௌதம் மேனனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கௌதம் மேனன் எங்களுக்குள் சண்டை எல்லாம் எதுவும் இல்லை.
மின்னலே திரைப்படம் எடுத்த பொழுது அந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசையாக இருந்தது. ஆனால் அப்பொழுது அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை.
ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் போட்ட இசை என்னை அவர் மீது ஈடுபாடு காட்டச் செய்தது. அப்பொழுதே நான் முடிவு செய்துவிட்டேன் எனக்கான இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்தான் என்று.
அதற்கு பிறகு காக்க காக்க, வாரணம் ஆயிரம் என்று பல வெற்றி பாடல்களை கொடுத்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இருந்தாலும் வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு பிறகு நான் இசையமைப்பாளரை மாற்ற நினைத்தேன் முக்கியமாக ஏ ஆர் ரகுமானிடம் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்று யோசித்தேன்.
அப்போதும் என்னை சுற்றியுள்ளவர்கள் கூறினார்கள் வாரணம் ஆயிரம் மாதிரியான படத்தில் ஹிட் பாடலை கொடுத்த பிறகு இசையமைப்பாளரை நீ மாற்றுவது தவறு என்று, ஆனாலும் நான் ஒரு மாற்றத்திற்காக அதை செய்தேன்
மற்றபடி எங்களுக்குள் எந்த ஒரு சண்டையும் கிடையாது இப்பொழுது வெளியாக இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்திருக்கிறார் மேலும் வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு பிறகு என்னை அறிந்தால் திரைப்படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசை அமைத்தார் என்று கூறியிருக்கிறார் கௌதம் மேனன்.
