Hollywood Cinema news
நருட்டோவிற்கு எதற்காக இப்படி ஒரு ரசிக பட்டாளம் உள்ளது? இதுதான் காரணம்!..
தமிழக மக்களை பொருத்தவரை பல வகையான விஷயங்கள் மீது அவர்கள் பெரும் ஆர்வத்தை காட்டி வருவது உண்டு. சினிமாவிற்கு எப்படி ஒரு பெரும் ரசிக்கப்பட்டாளம் உள்ளதோ அதேபோல கார்ட்டூன் தொடர்களுக்கும் பெரும் ரசிக்கப்பட்டாளம் உண்டு.
90ஸ் கிட்சை பொருத்தவரை ஜாக்கிசான், பவர் ரேஞ்சர்ஸ், ஸ்கூபி டூ போன்ற பல கார்ட்டூன்கள் அவர்களால் மறக்க முடியாத கார்ட்டூன்களாகும். வளர்ந்த பிறகும் கூட பலரும் கார்ட்டூன் பார்க்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். மேலும் கார்ட்டூன் பார்ப்பது கற்பனை சக்தியை விரிவுபடுத்தும் என்பதால் பல நாடுகளிலும் கூட கார்ட்டூன் பார்ப்பதற்கும், காமிக்ஸ் படிப்பதற்கும் குழந்தைகளை ஊக்குவிக்கின்றனர்.
பென் டென், ஸ்கூபி டூ போன்ற கார்ட்டூன்களை பார்த்து வந்த 90ஸ் கிட்ஸ் தற்சமயம் ஜப்பான் அனிமே எனும் புதுவகை கார்ட்டூனுக்கு தாவியுள்ளனர். ஜப்பான் அனிமே என்பது ஜப்பானில் எடுக்கப்படும் அனிமேஷனை குறிக்கும் வார்த்தையாகும்.
அதிலும் முக்கியமாக நருட்டோ என்கிற தொடர் தற்சமயம் தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நருட்டோ தொடரை தமிழ் டப்பிங் செய்து வெளியிட்டு வருகிறது சோனி யே என்கிற கார்ட்டூன் சேனல்.
கார்ட்டூன் தொடரை விடவும் அனிமே தொடருக்கு ஏன் இப்படி ஒரு ரசிக்கப்பட்டாளம் உருவாகியுள்ளது என பார்க்கும் பொழுது உணர்ச்சிரீதியாக அதிக விஷயங்களை பேசுபவையாக ஜப்பான் அனிமே இருக்கின்றன.
பொதுவாக பென்டன் மாதிரியான தொடர்களில் உணர்வு பூர்வமான தொடர்பு எதுவும் கதாபாத்திரங்கள் பெரிதாக இருக்காது. ஆனால் அனிமே அப்படி இல்லாமல் தொடர்ந்து ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு இடையே உள்ள உணர்ச்சி ரீதியாக விஷயங்களை பெரிதாக பேசுகின்றது. மேலும் கார்ட்டூன் என்பவை சிறுவர்களுக்கானதே ஆனால் அனிமே அதையும் தாண்டி பெரியவர்கள் பார்க்கும் வகையில் இருக்கின்றன இதனாலேயே இந்த தொடருக்கு பெரும் ரசிக்கப்பட்டாளம் உருவாகி உள்ளது.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்