Cinema History
குன்றத்தூர் முருகன் கோவில்தான் கேப்டனுக்கு செண்டிமெண்ட்!.. பின்னாடி பெரிய கதை உண்டு..
தமிழில் அனைவராலும் மறக்க முடியாத நடிகர்களில் கேப்டன் விஜயகாந்த் முக்கியமானவர். விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்களுக்கு அப்போதெல்லாம் பெரும் வரவேற்பு இருந்து வந்தது. தொடர்ந்து ஒரே வருடத்தில் பத்துக்கும் அதிகமான படங்களில் கூட நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார் விஜயகாந்த். இந்த நிலையில் ஒரு வழியாக அவருக்கு தூரத்தில் இடி முழக்கம் என்கிற படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
அப்போதெல்லாம் சினிமாவில் படத்தின் முதல் காட்சியை எடுக்கும்போது மங்களகரமாக எடுக்க வேண்டும் என்ற செண்டிமெண்ட் இருந்தது. எனவே அதிகப்பட்சம் சாமி படத்தை காட்டியோ, அல்லது சாமி கும்பிடுவது போலவோதான் படத்தை இயக்குவார்கள்.
எனவே தூரத்து இடி முழக்கம் திரைப்படத்திலும் கூட முதல் காட்சியை அப்படியே எடுத்தனர். இதற்காக குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு போய் காட்சியை படமாக்கினர். அதற்கு பிறகு தனது வாழ்நாளில் எந்த ஒரு விஷயத்தை செய்வதாக இருந்தாலும் அதை குன்றத்தூர் முருகன் முன்னிலையில்தால் செய்வாராம் கேப்டன்.
