Connect with us

அவசர அவசரமா நிச்சயதார்த்தம் பண்ண இதுதான் காரணம்!.. உண்மையை கூறிய நாகார்ஜுனா!..

naga chaitanya

News

அவசர அவசரமா நிச்சயதார்த்தம் பண்ண இதுதான் காரணம்!.. உண்மையை கூறிய நாகார்ஜுனா!..

Social Media Bar

நாகசைதன்யாவின் நிச்சயதார்த்தம்தான் தற்சமயம் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது.

சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாகசைதன்யா. நாக சைதன்யா மூன்று தலைமுறையாக தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் குடும்ப வாரிசு நடிகர்களில் ஒருவராவார்.

சினிமாவில் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் நாக சைதன்யாவிற்கும் சமந்தாவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில காலங்களே அவர்களது திருமண வாழ்க்கை நீடித்தது.

விவாகரத்து:

அதற்கு பிறகு இருவருக்கும் இடையே விவாகரத்து நடந்தது. அதனை தொடர்ந்து உடல்நல குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சமந்தா தொடர்ந்து அதற்கு சிகிச்சை எடுத்து வருகிறார். நாக சைதன்யா கொடுத்த ஜீவனாம்ச தொகையை கூட வாங்கிக் கொள்ளாமல் தனது சொந்த காலில் நின்று வாழ்ந்து வருகிறார் சமந்தா.

இருந்தாலும் அவருக்கு திரும்ப காதல் திருமணம் என்று எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் நாக சைதன்யா தற்சமயம் சோபிதா என்கிற நடிகையை காதலித்து அவருடன் நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார். இந்த நிலையில் இந்த நிச்சயதார்த்தம் சமந்தாவிற்கு நாகசைதன்யா தனது காதலை ப்ரொபோஸ் செய்த நாளில் நடந்திருப்பதாக ஒரு சிலர் கூறி வந்தனர்.

மறுதிருமணம்:

மேலும் இந்த நிச்சயதார்த்தத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக செய்ய வேண்டும் இதில் ஏதோ தில்லுமுல்லு இருக்கிறது என்றும் ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்தன. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நாகார்ஜுனா இது குறித்து விளக்கம் கொடுத்து இருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது ஆகஸ்ட் 8ஆம் தேதி ரொம்ப நல்ல நாள் என்பதால்தான் அவசரமாக அந்த நாளில் நிச்சயதார்த்தத்தை நடத்த முடிவு செய்தோம். மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததால் சரி உடனே நிச்சயத்தார்த்தை நடத்தி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் இன்னும் திருமண தேதியை முடிவு செய்யவில்லை என்று கூறி இருக்கிறார் நாகார்ஜுனா.

To Top