Connect with us

ஏழைகள்னா இளக்காறமா போய்டுச்சா?. இர்ஃபான் செயலால் கடுப்பான மக்கள்..!

Tamil Cinema News

ஏழைகள்னா இளக்காறமா போய்டுச்சா?. இர்ஃபான் செயலால் கடுப்பான மக்கள்..!

Social Media Bar

யூ ட்யூப்பில் உணவுகள் குறித்த விமர்சனம் அளித்து அதன் மூலமாக பிரபலமடைந்தவர் இர்ஃபான். அதே சமயம் பிரபலமானது முதலே இர்ஃபான் செய்யும் பல விஷயங்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே அவர் சென்ற கார் விபத்தை ஏற்படுத்தி பெரிய பிரச்சனை ஆனது.

பிறகு தனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பே வெளிநாட்டிற்கு சென்று அது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கண்டறிந்து அதை ஒரு வீடியோவாக போட்டு பிரச்சனைக்கு உள்ளானார் இர்ஃபான்.

இந்த நிலையில் தற்சமயம் ரம்ஜானை முன்னிட்டு ஏழைகளுக்கு புது துணியும் பணமும் வழங்குவதாக கூறி ஒரு வீடியோ ஒன்றை செய்திருந்தார் இர்ஃபான். அதில் அவர் செய்த விஷயங்கள் மக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

irfan-view

irfan-view

 

அந்த வீடியோவில் காரில் செல்லும் இர்ஃபான் சாலையோரங்களில் இருக்கும் ஏழைகளை அழைத்து புது துணி வழங்குகிறார். அப்போது பலரும் அவரிடம் புது துணி கேட்டு கையை காருக்குள் விடுகின்றனர். இதனால் கோபமடைந்த இர்ஃபான் அவர்களை திட்டுகிறார்.

பிறகு வீடியோவிலேயே அவர்களை நக்கல் செய்தும் பேசியுள்ளார். ஏழைகள் என்றால் அவ்வளவு நக்கலாக போய்விட்டதா? காரில் இருந்து இறங்கி எல்லாம் தானம் கொடுக்க மாட்டீர்களா? என இதுக்குறித்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் மக்கள்.

To Top