ராசியா இருக்கட்டுமேன்னு மொத பாட்டையே அப்பா படத்துல இருந்து தூக்கினேன்!.. உண்மையை உடைத்த யுவன்!..
Yuvan Shankar raja: சிறு வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா. சும்மா ஜாலிக்காக யுவன் சங்கர் ராஜா இசையமைத்த பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் அலையை கிளப்பின.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு இணையான ஒரு இசையமைப்பாளர் வந்துவிட்டார் என அப்போதே பலரும் பேசினர். யுவன் சங்கர் ராஜா சினிமாவிற்கு வந்து வெகு காலங்கள் கழித்தே கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு சினிமாவிற்கு அறிமுகமானார்.
முதலில் சினிமாவிற்கு வந்தப்போது இயக்குனர் பேரரசுவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தார் வெங்கட்பிரபு. சிவகாசி திரைப்படத்தில் கூட வைரம் என்கிற தங்கை கதாபாத்திரத்தின் கணவராக இவர் நடித்திருப்பார். இந்த நிலையில் முதன் முதலாக 2007 ஆம் ஆண்டு சென்னை 28 என்கிற திரைப்படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு,

மிகவும் ஜாலியான ஒரு படம் சென்னை 28. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜாதான் பணிப்புரிந்தார். படத்தின் பாடல்களை உருவாக்கும்போது அந்த படத்தில் கண்டிப்பாக ஒரு மெலோடி பாடல் வேண்டும் என கூறிவிட்டார் வெங்கட் பிரபு.
அதனை தொடர்ந்து அவருக்கு யாரோ மனதிலே என்கிற பாடலை போட்டு கொடுத்தார் யுவன் சங்கர் ராஜா. ஆனால் அந்த பாடல் குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும்போது சுவாரஸ்யமான சில தகவல்களை கூறியிருந்தார். அதாவது அந்த படத்தில் இசையமைக்க யோசித்தப்போது பெரிதாக பாடல்களே தோன்றவில்லையாம்.
இதனால் இளையராஜா பாடல் ஒன்றை காபி அடித்துதான் அந்த பாடலை இசையமைத்தேன். கோழி கூவுது படத்தில் வரும் ஏதோ மோகம், ஏதோ தாகம் என்கிற பாடலை அடிப்படையாக கொண்டுதான் இந்த பாடலை இசையமைத்தேன் என கூறியுள்ளார் யுவன் சங்கர் ராஜா!..