படப்பிடிப்புகளுக்கு செல்லும் நடிகர்கள் பல்வேறு வகையான இடையூறுகளை அங்கு சந்திப்பதை பார்க்க முடியும். நிறைய நடிகர்கள் ஆரம்ப காலகட்டங்களில் இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் அப்படியான ஒரு சம்பவத்தை நடிகர் சரத்குமார் தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த திரைப்படம் சமுத்திரம். இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரு கிராமத்தில் நடத்திக் கொண்டிருந்தபோது அங்கு நடந்த பிரச்சனை குறித்து சரத்குமார் கூறியிருக்கிறார்.
அதில் அவர் கூறும்போது நாங்கள் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருக்கும் பொழுது இரண்டு நபர்கள் குடித்துவிட்டு அங்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுதே எனக்கு மனதுக்கு சரியாக படவில்லை நான் நினைத்தது போலவே அவர்கள் படப்பிடிப்பில் ஏதோ தகராறு செய்தனர். என்னவென்று கேட்கப்போன கே எஸ் ரவிக்குமாரை அவர்கள் அடித்துவிட்டனர்.
இதனால் கோபமடைந்த பட குழுவினர் அந்த இரண்டு நபர்களையும் போட்டு வெகுவாக அடித்துவிட்டனர். கிட்டத்தட்ட பட குழுவினர் 150 பேர் இருந்தனர் இப்பொழுது நாங்கள் இந்த இடத்தை விட்டு போக வேண்டுமென்றால் அந்த கிராமங்களை தாண்டி தான் போக வேண்டும்.
அது எப்படியும் பெரிய பிரச்சினையாகும் என்று தெரிந்துவிட்டது எனது காரை எடுக்கலாம் என்று நான் சென்றிருந்த பொழுது மக்கள் அதனை கவிழ்த்து போட்டிருந்தனர். மேலும் 2000க்கும் அதிகமான நபர்கள் எங்களை சுற்றி நின்று கொண்டிருந்தனர்.
என் வாழ்வில் சாவை பார்த்த ஒரு தருணம் அது என்றுதான் கூற வேண்டும் என கூறியுள்ளார் சரத்குமார்.










