Bigg Boss Tamil
மேக்கப்பை கழட்டி காட்டுறோம்.. பாருங்க..! – பிக்பாஸ் வீட்டில் பெண்கள் புரட்சி! BiggBoss 7

பிரச்சனைக்கு பஞ்சம் இல்லாத பிக்பாஸ் வீட்டில் தற்போது மேக்கப் சம்பந்தமாக புதிய பஞ்சாயத்து உருவாகியுள்ளது.
பிக்பாஸில் அளிக்கப்பட்ட டாஸ்க்கில் ஜெயிக்காவிட்டால் ஹவுஸ்மேட்ஸ் தங்கள் மேக்கப்பை கலைக்கவேண்டும் என்று டாஸ்க்கில் கூறப்பட்டது. ஆனால் அந்த டாஸ்கில் அவர்கள் வென்றுவிட்டார்கள். இருந்தாலும் விஷ்ணு, பிரதீப் போன்றோர் அவர்களது மேக்கப்பை வைத்து பெண்களை கிண்டல் செய்தனர். கேமரா முன்னால் வந்து பேசிய கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டு ”பெண்களை மேக்அப் இல்லாமல் பார்க்க வேண்டுமென்றால் ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்யுங்கள்” என்று பேசியது மேலும் பிரச்சினையை பெரிதுபடுத்தி உள்ளது
” நல்ல வேல டாஸ்க் ஜெயிச்சிட்டீங்க என்ன மேக்கப் கலரா மாறி ஆயிருக்கும் அப்பறம் எல்லாரும் பயந்து இருப்பாங்க” போன்ற கிண்டல்கள் பெண்களை உசுப்பி விட்டுள்ளது.
இதனால் ”டாஸ்க் ஜெயிச்சி இருந்தாலும் பரவாயில்ல நாங்க மேக் அப் இல்லாமலேயே இருக்கோம்” என முடிவெடுத்த மாயா உள்ளிட்ட 3 ஹவுஸ்மேட்ஸ் மேக்கப்பை கலைத்து உள்ளனர். இந்த விஷயத்தில் மாயாவுக்கு ஆதரவாக இருந்த ஜோவிகா ”எதற்காக நான் மேக்கப்பை கலைக்கவேண்டும். நான் கலைக்காமலே இருப்பேன்” என்று மேக்கப் கலைக்க மறுத்துள்ளார். இந்த மேக்கப் பஞ்சாயத்தால் இன்று பிக்பாஸ் வீடே கலகலத்துக் கொண்டிருக்கிறது.
