நோய்வாய்ப்பட்டு கமல் காலில் வந்து விழுந்த நபர்!.. உடனே கமல் எடுத்த நடவடிக்கை!..

தமிழில் எப்போதுமே வரவேற்பை பெற்ற நடிகர்களில் நடிகர் கமல்ஹாசன் முக்கியமானவர். கமல்ஹாசன் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வெற்றியை கொடுக்க கூடியவை. மேலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பவர் கமல்ஹாசன்.

ஒவ்வொரு திரைப்படத்திலும் படத்தின் கதாபாத்திரம் என்னவோ அதுவாகவே மாறி நடிக்க கூடியவர். இதனாலேயே சிவாஜி கணேசனுக்கு பிறகு சிறப்பான நடிகராக கமல்ஹாசன் பார்க்கப்படுகிறார். அடுத்ததாக கமல்ஹாசன் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

நேற்று அந்த படத்தின் ட்ரைலர் வெளிவந்திருந்தது. நிறைய நடிகர்கள் மக்களுக்கு நல்லது செய்வதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கமல்ஹாசன் அவருடன் பணிப்புரிந்தவர்களுக்கு நன்மைகள் செய்ததாக கேள்விப்பட்டிருப்போம்.

Social Media Bar

ஆனால் கமல்ஹாசனும் கூட பலருக்கும் பல நன்மைகளை செய்துள்ளார். ஆனாலும் பெரிதாக அது யாருக்கும் தெரிவதில்லை என கூறப்படுகிறது. கமலுடன் பணிப்புரிந்தவர் இதுக்குறித்து கூறும்போது ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது கமல்ஹாசனிடம் ஒரு நபர் குடும்பத்தோடு வந்தார்.

வந்தவர் நேராக கமல் காலில் விழுந்தார். எனக்கு உடம்பு முடியவில்லை. 2 மாதமாக வேலைக்கும் போகவில்லை உங்களை நம்பிதான் வந்துள்ளேன் என கூறியுள்ளார். உடனே உதவியாளரை அழைத்த கமல்ஹாசன் அந்த நபருக்கு மருத்துவ செலவிற்கும், குடும்ப செலவிற்கும் சேர்த்து ஒரு பெரிய தொகையை கொடுத்துள்ளார்.