Connect with us

பாபா படத்தோட அந்த சாதனையை எந்த படத்தாலும் செய்ய முடியாது… இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே சாமி!..

rajinikanth baba

Cinema History

பாபா படத்தோட அந்த சாதனையை எந்த படத்தாலும் செய்ய முடியாது… இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே சாமி!..

cinepettai.com cinepettai.com

India meghdoot postcard : தமிழ் சினிமாவில் அதிகப்பட்சம் வெற்றி படங்களை மட்டுமே கொடுக்கும் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (rajinikanth) முக்கியமானவர். ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் வெற்றியைதான் கொடுக்கும். ஆனால் அவர் பெரிதும் எதிர்பார்த்தும் அவருக்கு தோல்வியை கொடுத்த திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் உண்டு.

அதில் முக்கியமான திரைப்படம் பாபா (baba movie). பாபா படத்திற்கு திரைக்கதை, வசனம் வரை அனைத்தும் ரஜினிகாந்தே எழுதினார். ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால் விரக்தியடைந்த ரஜினிகாந்த் பிறகு சில வருடங்களுக்கு திரைப்படங்களிலேயே நடிக்காமல் இருந்தார்.

அந்த அளவிற்கு அந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தார் ரஜினிகாந்த். ஆனால் இந்த படத்திற்கும் இந்திய தபால் துறைக்கும் ஒரு நெருங்கிய தொடர்புண்டு. இந்திய தபால் துறையில் மிகவும் மலிவான விலையில் தகவல்களை அனுப்புவதற்காக போஸ்ட்கார்டு என்னும் முறையை வைத்திருந்தனர்.

மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த போஸ்ட்கார்டுகள் வெறும் 50 பைசாக்கள் மட்டுமே. 50 பைசா செல்லாமல் போன இந்த காலக்கட்டத்திலும் இந்த போஸ்ட் கார்டுகள் உபயோகத்தில் உள்ளன. அப்போதெல்லாம் இந்த கார்டுகள் அதிகமாக புழக்கத்தில் இருந்தன.

எனவே ரஜினிகாந்த் ஒரு முடிவு செய்தார். படத்தை இந்த போஸ்டு கார்டுகள் வழியாக விளம்பரப்படுத்தினால் நன்றாக இருக்குமே என நினைத்த ரஜினிகாந்த் இதுக்குறித்து இந்திய தபால் துறையிடம் பேசியதாக கூறப்படுகிறது.

இதை பரிசீலனை செய்த தபால் துறை ஒரு கார்டுக்கு 50 பைசாக்களை நாம் மக்களிடம் வாங்குகிறோம். அதற்கு பதிலாக அந்த 50 பைசாவை விளம்பரதாரரிடம் பெற்றுக்கொண்டு மக்களிடமும் 25 பைசாவை பெற்றுக்கொண்டால் அது லாபம்தானே என யோசித்த தபால் துறை அதன்படியே மேகதூத் போஸ்ட்கார்டு என்னும் புதிய அஞ்சல் அட்டையை அறிமுகப்படுத்தியது.

அந்த அட்டை பிரிண்ட் செய்யப்படும்போதே விளம்பரத்துடன் ப்ரிண்ட் செய்யப்பட்டு 25 பைசாவிற்கு விற்கப்பட்டது. ஆனால் அதன் மதிப்பு 50 பைசாவாகும். இப்படி இந்தியாவில் முதன் முதலாக போடப்பட்ட அஞ்சல் அட்டை பாபா அஞ்சல் அட்டையாகும். அதற்கு பிறகு பல நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை அஞ்சல் அட்டையில் போட்டாலும் முதன் முதலாக போட்ட பெருமை பாபா படத்திற்கே சேரும். அதன் பிறகு சந்திரமுகி திரைப்படமும் இதே போல அஞ்சல் அட்டையில் அச்சிடப்பட்டது குறிப்பிடத்தக்கது!.

POPULAR POSTS

gv prakash
jonita
ajith
lingusamy kamalhaasan1
karthik subbaraj
To Top