Connect with us

கிராமத்து ஆடலும் பாடலும் நிகழ்ச்சியா இது!.. தமன்னாவால் அநாகரிகமாக முடிந்த இசை நிகழ்ச்சி!..

thammanna

Latest News

கிராமத்து ஆடலும் பாடலும் நிகழ்ச்சியா இது!.. தமன்னாவால் அநாகரிகமாக முடிந்த இசை நிகழ்ச்சி!..

cinepettai.com cinepettai.com

Thammanna : இசை நிகழ்ச்சி கலாச்சாரம் என்பது தற்சமயம் தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் அதிகமாக வரவேற்பை பெறும் ஒரு விஷயமாக இருக்கிறது. இசையமைப்பாளர்களுக்கு திரைத்துறையில் படங்களுக்கு இசையமைத்து கிடைக்கும் பணத்தை விடவும் இந்த மாதிரியான இசை நிகழ்ச்சிகளை நடத்தும் பொழுது அதிக காசு கிடைக்கின்றது.

ஏற்கனவே அனிருத், ஏ.ஆர் ரகுமான், விஜய் ஆண்டனி போன்ற இசையமைப்பாளர்கள் பல இசை கச்சேரிகளை நிகழ்த்தி இருக்கின்றனர் அதில் ஏ.ஆர் ரகுமான் சென்னையில் நடத்திய இசை கச்சேரி கூட இடையில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.

பிறகு ஏ.ஆர் ரகுமானே இதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார். இதேபோல பாடகர்களும் இசை நிகழ்ச்சி நடத்துவது உண்டு. எஸ்.பி.பி மாதிரியான பெரும் பாடகர்கள் உலகம் முழுவதும் பல இடங்களுக்கு சென்று தமிழர்களுக்காக பாடல் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

அந்த வகையில் பாடகர் ஹரிஹரன் இலங்கையில் ஒரு இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அந்த இசை நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏனெனில் ஹரிஹரன் பாடலுக்கு எல்லா காலங்களிலுமே ரசிகர்கள் உண்டு.

ஆனால் இந்த பாடல் நிகழ்ச்சிக்கு நடுவே நடிகை தமன்னா ஜெயிலர் திரைப்படத்தில் வரும் காவாளி பாடலுக்காக நடனமாடி இருந்தார். இந்த நடனம் ஆடுவதன் மூலம் இவருக்கும் நல்ல காசு கிடைக்கிறது என்றாலும் அதிக கவர்ச்சியான உடை அணிந்து தமன்னா இந்த நடனத்தை ஆடியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தனன் கூறும் பொழுது கிராமங்களில் திருவிழா காலங்களில் ஆடலும் பாடலும் என்கிற நிகழ்ச்சி நடக்கும். அது மிகவும் மோசமான ஒரு நிகழ்ச்சியாகும். பிறகு அரசே அந்த நிகழ்ச்சி எல்லாம் இனி நடத்தக்கூடாது என்று கூறிவிட்டது.

ஆனால் அதையே சினிமாக்காரர்கள் செய்தால் யாருக்கும் தவறாக தெரிவதில்லை. கிட்டத்தட்ட கிராமத்தில் நடக்கும் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி போலதான் தமன்னாவின் நடனமும் இருந்தது இந்த மாதிரியான இசை நிகழ்ச்சிகளுக்கு சென்று அநாகரிகமாக இப்படி நடனம் ஆடுவது தவறு என்று கூறியிருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன்.

To Top