சொன்ன உடனே அவருக்கு கண்ணுல தண்ணி வரும் –  கமலை புகழும் பிரபல இயக்குனர்கள்

தமிழ் திரை உலகில் பல வகையான நடிகர்கள் உள்ள போதும் கூட நடிப்பிற்கு என சில நடிகர்கள் மட்டுமே புகழப்படுகின்றனர். ஆண் நடிகர்களை பொறுத்தவரை வெகு காலமாக சிறந்த நடிகராக புகழப்பட்டவர் நடிகர் சிவாஜி கணேசன். ஏனெனில் ஒரு நடிகனால் அனைத்து வித கதாபாத்திரமும் நடிக்க முடிய வேண்டும் என்கிற வரையறையே ஒரு சிறந்த நடிகரை தேர்ந்தெடுக்க உதவுகிறது.

Social Media Bar

அழுதல், சிரித்தல், கோபப்படுதல், பணக்காரன், பிச்சைக்காரன், போலீஸ், திருடன் என அனைத்து வகையிலும் நடிக்க கூடிய சிறந்த நடிகராக சிவாஜி கணேசன் இருந்தார். அவருக்கு அடுத்து அப்படி ஒரு நடிகராக பார்க்கப்படுபவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் பற்றி ஒரு பேட்டியில் பாரதி ராஜா பேசும்பொழுது ”சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் க்ளைமாக்ஸில் கமல் கண்ணிற்கு ஒரு க்ளோஸ் அப் ஷாட் வரும். அதில் நான் கமலிடம் உன் கண்ணில் கண்ணீர் வர வேண்டும். ஆனால் அது நான் சொல்லும் போதுதான் கண்ணில் இருந்து கீழே விழ வேண்டும் என்றேன். கமலும் அந்த காட்சியில் நான் சொல்லும் நேரத்தில் கண்ணீரை உதிர்த்து அசர வைத்தார்” என கூறியிருந்தார்.

அதே போல தற்சமயம் வெளியாகி ஓடி கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படத்தில் போர் கண்ட சிங்கம் பாடலில் மடியில் தனது பேரனை வைத்துக்கொண்டு விக்ரம் கதாபாத்திரம் இருப்பார். அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வர வேண்டும் என லோகேஷ் கூறியுள்ளார். உடனே கமல் தனது கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்துள்ளார்.

எனவே இப்போதும் கூட நடிப்பிற்கு ஒரு இலக்கணமாக கமல் பார்க்கப்படுகிறார்.