கமல் செஞ்ச வேலையால்தான் என் படம் ஓடாம போச்சு!.. புலம்பும் இயக்குனர் லிங்குசாமி!.

ஆனந்தம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. அதற்கு பிறகு சண்டக்கோழி, ரன் என பல வெற்றி படங்களை இவர் கொடுத்துள்ளார். தயாரிப்பாளராகவும் இவர் சில திரைப்படங்களில் பணிப்புரிந்துள்ளார்.

அப்படியாக கமலோடு பணிப்புரிந்த அனுபவத்தை அவர் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறும்போது உத்தமவில்லன் திரைப்படம் எனக்கு பெரிய ஏமாற்றம் என்றுதான் கூற வேண்டும். முதன் முதலில் அந்த படத்தை நான் தயாரிக்க ஒப்புக்கொண்டப்போது அது முழு கமர்ஷியல் படமாக இருந்தது.

Social Media Bar

வெளிநாட்டில் மாட்டிக்கொண்ட தனது தம்பியை காப்பாற்ற கமல் மேற்கொள்ளும் சாகசங்களே கதையாக இருந்தது. தம்பியாக நடிகர் சித்தார்த் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு பிறகு ஒவ்வொரு வாரமும் கதையை மாற்றினார் கமல்ஹாசன்.

அப்படியே மாறி மாறி படத்தின் மொத்த கதையும் மாறிவிட்டது. நான் அந்த படத்தில் தயாரிப்பாளராக இருந்ததால் என்னால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது. இயக்குனராக இருந்திருந்தால் இப்படி கதையை மாற்ற விட்டிருக்க மாட்டேன் என்கிறார் லிங்குசாமி.