சினிமா ரசிகர்களுக்கும், விமர்சனம் செய்பவர்களுக்கு இன்று ஒரு சிறப்பான நாள் என்று கூறலாம். ஏனெனில் வரிசையாக இன்று மூன்று தமிழ் படமும் அதே சமயம் ஒரு ஹாலிவுட் படமும் வெளியாகி உள்ளது.

தமிழில் நடிகர் அருண் விஜய் நடித்த யானை திரைப்படம் வெளியாகியுள்ளது. விக்ரம் திரைப்படம் வெளியான பொழுதே இந்த படம் வெளியாக இருந்தது. ஆனால் வெளியீடு தள்ளி போன நிலையில் இன்று வெளியாகியுள்ளது.

அதே போல நடிகர் மாதவன் நடித்த ராக்கட்ரி என்கிற திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. மூன்றாவது திரைப்படமாக நடிகர் அருள்நிதி நடித்த டி ப்ளாக் என்கிற திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்சமயம் வெளியான மூன்று திரைப்படங்களில் டி ப்ளாக் திரைப்படம் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலும் நல்ல திரில்லர் படமாக இது இருப்பதாக கூறப்படுகிறது.
இவை இல்லாமல் ஹாலிவுட் திரைப்படமான மினியன்ஸ் த ரைஸ் ஆஃப் க்ரு திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. மினியன்ஸ் திரைப்படத்திற்கு ஒரு ரசிக பட்டாளம் இருப்பதால் இந்த படமும் கூட வரவேற்பை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.









