நெஜமாவே படம் நல்லாதான் இருக்கா –  பொன்னியின் செல்வன் குறித்து டவுட்டான ஏ.ஆர் ரகுமான்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்களுக்கு எப்போதும் தமிழ் சினிமாவில் சிறப்பு இடம் உண்டு. தமிழில் பல வருடங்களாக இருந்து வரும் ஒரு தனித்துவமான இயக்குனராக மணிரத்னம் இருக்கிறார்.

ரோஜா திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் மணிரத்தினத்தின் அனைத்து படங்களுக்கும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களே இசையமைத்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் மாபெரும் பொருள் செலவில் தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படமும் கூட மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

மற்ற படங்களை போலவே பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் அவர்களே இசையமைக்கிறார். பாடலுக்கு இசையமைக்கும்போது அதன் காட்சிகளை பார்த்துள்ளார் ஏ.ஆர் ரகுமான். அப்போது அதன் காட்சிகள் நினைத்த அளவிற்கு இல்லை என ஏ.ஆர் ரகுமான் அதிருப்தி அளித்திருந்தாராம். இதுவரை எவ்வளவோ படங்களுக்கு இசையமைத்த போதும் ஏ.ஆர் ரகுமான் மணிரத்தினத்திடம் படம் குறித்து பேசியதே கிடையாதாம்.

ஆனால் அவரே இந்த படத்திற்கு சில காட்சிகள் சரியாக இல்லை என மணிரத்தினத்திடம் கூறியுள்ளார். மக்களிடையே மாபெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொன்னியின் செல்வன் அந்த எதிர்ப்பார்ப்பை சரி செய்தாக வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh