படமும் எடுக்குறது கிடையாது!.. வர்ற படத்தையும் குறை சொல்ல வேண்டியது!.. ரஜினிக்கு அட்வைஸ் செய்த இயக்குனர் லிங்குசாமி!.

இயக்குனர் லிங்குசாமி தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர் ஆவார். மாதவன் நடிப்பில் இவர் இயக்கிய ரன் திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் அவருக்கு நிறைய நடிகர்களை வைத்து படம் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது,

அந்த சமயத்தில் ரஜினியும் கூட தன்னை வைத்து ஒரு படத்தை இயக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் லிங்குசாமியிடம் எந்த கதையும் இல்லை. எனவே ரஜினிக்கு தகுந்தாற் போல கதை எழுத சில நாட்கள் அவகாசம் கேட்டார்.

ஆனால் அதற்கு பிறகு கூட ரஜினிக்கு ஏற்ற மாதிரி அவரால் கதை எழுத முடியவில்லை. எனவே ரஜினிகாந்தை வைத்து அவர் திரைப்படமே இயக்கவில்லை. ஆனாலும் ரஜினிகாந்திற்கும் இவருக்குமிடையே நல்ல நட்பு இருந்து வந்தது.

lingusamy
lingusamy
Social Media Bar

பெரும்பாலும் ரஜினி படங்கள் வெளியான பிறகு அவற்றை பார்த்துவிட்டு ரஜினிக்கு போன் செய்து அதுக்குறித்து விமர்சனம் செய்யக்கூடியவர் லிங்குசாமி. லிங்கா திரைப்படம் வெளியானப்போது அதை முதல் நாள் சென்று பார்த்த லிங்குசாமி உடனே ரஜினிக்கு போன் செய்துள்ளார்.

இந்த படத்தின் க்ளைமேக்ஸ் மோசம் சார். அதுதான் இந்த திரைப்படத்தின் எதிர்மறையான விஷயமாக அமைய போகிறது என்றார். அதே போல லிங்கா படம் தோல்வியை கண்டது. அதன் பிறகு 10 நாட்கள் கழித்து போன் செய்த ரஜினிகாந்த் நீங்கள் சொன்னது உண்மைதான் லிங்குசாமி எங்களுக்கே அந்த க்ளைமேக்ஸில் கொஞ்சம் குழப்பம் இருந்தது என கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

இந்த நிகழ்வை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் லிங்குசாமி.