நல்ல படம் எடுத்திருக்கீங்கன்னா எதுக்கு கில்லி படத்துக்கு பயப்படுறீங்க!.. ரத்னம் படம் விவகாரத்தில் கருத்து தெரிவித்த கே.எஸ் ரவிக்குமார்!..

விஷால் நடிப்பில் தற்சமயம் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் ரத்னம். மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதுவும் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார்.

ஆனால் நேற்றிலிருந்து இந்த திரைப்படம் வெளியாவதில் சில சிக்கல்கள் இருந்து வருகின்றன. முக்கியமாக இந்த திரைப்படத்திற்கு திரையரங்குகளே கிடைக்காமல் இருந்து வந்தன. இதனால் கடுப்பான விஷால் இன்று காலை கூட இதுக்குறித்து ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆனால் கில்லி படத்தின் மறுவெளியீட்டால்தான் இந்த திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்கவில்லை எனவும் பேச்சுக்கள் இருக்கின்றன. ஏனெனில் புது படங்களை விடவும் மறு வெளியீட்டு படங்களில் திரையரங்குகளுக்கான பங்கு அதிகம். லாப நோக்கில் பார்க்கும்போது ரத்னம் திரைப்படத்தை விடவும் கில்லி திரைப்படம் திரையரங்குகளுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

ghilli
ghilli
Social Media Bar

இந்த நிலையில் இதுக்குறித்து பேசிய கே.எஸ் ரவிக்குமார் கூறும்போது ஒரு படம் மறுவெளியீடு ஆக கூடாது என நாம் எப்படி சொல்ல முடியும். அது அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரின் உரிமை. திரையரங்கில் அதுவும் ஒரு வகை வியாபாரம்தானே நாம் எப்படி அதில் கை வைக்க முடியும்.

நல்ல படமாக இருந்தால் எதுக்குறித்தும் கவலைப்பட தேவையில்லை. ஒருவேளை ரத்னம் நல்ல படம் என பேச்சுக்கள் இருந்தால் அடுத்த வாரம் அதன் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் அல்லவா என்று கூறியிருக்கிறார் கே.எஸ் ரவிக்குமார்.

ஆனால் அடுத்த வாரம் தல அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. பிறகு எப்படி திரையரங்கு அதிகரிக்கும் என்பதுதான் கேள்வியாக உள்ளது.