மாளவிகாவால் என் குடும்பத்தில் வந்த சண்டை!.. சுந்தர் சிக்கு நடந்த சம்பவம்!..

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கான ஆளாக சுந்தர் சி இருந்து வருகிறார். சுந்தர் சியை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அவர் இருந்து வருகிறார்.

சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான முக்கியமான காமெடி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கியுள்ளார் சுந்தர் சி என கூறலாம். அதே சமயம் அவர் அருணாச்சலம், அன்பே சிவம் மாதிரியான திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

நடிகை மாளவிகாவை தமிழ் சினிமாவிற்கு சுந்தர் சிதான் அறிமுகப்படுத்தினார். அவரை அறிமுகப்படுத்தியதால் குஷ்புவுக்கும் அவருக்கும் இடையே நடந்த சண்டையை ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சுந்தர் சி.

sundar C
sundar C
Social Media Bar

குஷ்புவிற்கு குழந்தை பிறந்தப்போது அவருக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது குறித்து அவர் தீவிரமாக யோசித்து வந்தார். அந்த சமயங்களில் எல்லாம் இணைய வசதி கிடையாது. எனவே குழந்தை பெயர்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை எடுத்து அதில் பெயர்களை தேர்ந்தெடுத்து வந்தனர். அப்போது குஷ்பு தேர்ந்தெடுத்த பெயர்தான் மாளவிகா.

இந்த நிலையில் படப்பிடிப்புக்கு சென்ற சுந்தர் சி ஏதோ ஒரு நியாபகத்தில் மாளவிகாவை அறிமுகம் செய்யும்போது அவருக்கு தனது மனைவி தேர்ந்தெடுத்த பெயரையே வைத்துவிட்டார். அதற்கு முன்பு அந்த நடிகையின் பெயர் ஸ்வேதா கொன்னர் என இருந்தது. இதனால் குஷ்புவுக்கும் தனக்கும் சண்டை வந்துவிட்டதாக பேட்டியில் கூறுகிறார் சுந்தர் சி.