Devara: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரீதேவி பல மொழிகளில் நடித்து பிரபலமானவர். அவரின் மகள் ஜான்வி கபூர் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தற்பொழுது தெலுங்கில் இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவார என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தேவரா படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளிவந்த நிலையில் இந்தப் பாடலில் ஜான்வி கபூரின் நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும் 50 லட்சம் பிரிவுகளை தாண்டி youtube இல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் “பத்தவைக்கணும்” என்ற பாடல் முன்னதாக வெளிவந்த ஒரு பாடலில் காப்பி என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
தேவரா பாடல்
தேவரா பாடலை கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். மேலும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் அனிருத்தின் இசையில் இந்த படத்திலிருந்து முதலாவது சிங்கிள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேவரா படத்தின் பத்தவைக்கணும் என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த பாடலில் நடனமாடிருந்த ஜான்வி கபூரின் நடனம் அனைவராலும் ரசிக்கப்பட்டது. இந்த பாடலில் அவர் மிக கவர்ச்சியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தேவாரப் பாடல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
தற்பொழுது இந்த படத்தின் போஸ் புரொடக்க்ஷன் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளிவந்த நிலையில், படத்தின் பாடல் வெளியாகி அது நெடிசன்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
காப்பி அடித்த அனிருத்
இரண்டாவதாக வெளிவந்துள்ள “பத்தவைக்கணும்” பாடல் இலங்கை பாடகி யோஹானி பாடிய Manike Mage Hithe பாடலை காப்பி அடித்துள்ளார் என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் இந்தப் பாடல் ஹிந்தியில் Thank God படத்தில் இடம்பெற்று இருக்கும். ஆனால் அதை அனிருத் அப்படியே காப்பி அடித்து இசையமைத்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 pic.twitter.com/eoJpV0mzqs
— Movie Scoop (@MovieScoopIndia) August 5, 2024