ஹிட்லருக்கு விபூதி அடித்த ஒரு மெஷின்!. இமிட்டேஷன் கேம் திரைப்பட விமர்சனம்!.
Imitation Game: டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் பெனிட்டிக் கம்பேர்பேட்ச் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இமிட்டேஷன் கேம் திரைப்படத்தின் கதை இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நடந்த நிஜ கதையாகும்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ரகசியகமாக தகவல்களை பரிமாறி கொள்வது என்பது பெரிய பிரச்சனையாக இருந்தது. ஒரு நாடு தாக்கும் யுக்தியை அதன் எதிரி நாடுகள் கண்டறிந்து விட்டால் அதற்கு பிறகு அந்த நாடு தாக்குதல் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுவிடும் என்கிற நிலை இருந்தது.
ஹிட்லரின் மெஷின்:
இந்த நிலையில் ஜெர்மனியின் சர்வதிகாரியான ஹிட்லர் எனிக்மா என்னும் விஷேஷ எந்திரத்தை அதற்காக உருவாக்கினார். அந்த எந்திரமானது சில கலவையான ஆங்கில சொற்களின் வழியாக மெசேஜை கொடுக்க கூடியது. அந்த மெசேஜில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கண்டறிய அதே எனிக்மா மெஷின் இருக்க வேண்டும்.

இதனையடுத்து பிரிட்டன் எப்படியோ அந்த எனிக்மா சாதனத்தை திருடிவிட்டு வந்தப்போதும் அவர்களால் அந்த மெசேஜை படிக்க முடியவில்லை. ஏனெனில் தினசரி அந்த மெஷினின் செட்டிங் மாறிக்கொண்டே இருக்கும்.
மெசேஜை பெறுபவரும் அதே செட்டிங்கில் மெஷினை வைத்திருந்தால்தான் அந்த மெசேஜ் என்னவென்று அவர்களால் பெற முடியும். இந்த நிலையில் அந்த மெசேஜை கண்டுப்பிடிக்க ஒரு மனிதனுக்கு 20 வருடம் ஆகும் என்கிற நிலை இருந்தது.
ஆலன் ட்யூரிங் சாதனை:
இந்த நிலையில்தான் கணிதவியலாளரான ஆலன் ட்யூரிங் என்பவர் அந்த மெசேஜை கண்டு பிடிப்பதற்காக கிரிஸ்டோபர் என்னும் கருவியை கண்டுப்பிடித்தார். பிறகு ட்யூரிங் மெஷின் என அழைக்க அந்த கருவி இப்போது கணினி என அழைக்கப்படுகிறது.
ஆலன் ட்யூரிங் இந்த மெஷினை எப்படி கண்டுப்பிடித்தார் என சுவாரஸ்யமாக கூறும் படமே இமிடேஷன் கேம் திரைப்படம். இதில் ஆலன் ட்யூரிங்காக நடித்த நடிகர் பெனிடிக்ட் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.