40 வயதை கடந்த பிறகும் கூட தமிழ் சினிமாவில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை த்ரிஷா. நடிகை திரிஷா மிக இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைத்தது அப்படியே வாய்ப்பை பெற்று வந்த திரிஷா ஒரு கட்டத்தில் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வந்தார்.
சினிமாவில் பிரபலம்:
ஆனால் பொதுவாகவே சினிமாவில் கதாநாயகிகளுக்கான காலம் என்பது மிக குறைவுதான். அதிகபட்சம் 10 வருடம் சினிமாவில் தொடர்ந்து கதாநாயகியாக இருந்து விட்டாலே பெரிய விஷயம். இந்த நிலையில் திரிஷாவிருக்கும் ஒரு கட்டத்திற்கு பிறகு வரவேற்புகள் குறைய தொடங்கின.

புது நடிகைகளுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வந்தன. இந்த நிலையில் சில வருடங்கள் கழித்து வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மீண்டும் திரிஷாவின் மார்க்கெட்டை உயர்த்தியது.
அதனை தொடர்ந்து தற்சமயம் மீண்டும் கதாநாயகியாக நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. ஒரு பேட்டியில் நடிப்பு குறித்த தனது அனுபவத்தை கூறியிருந்தார்.
அதுதான் கஷ்டம்:
அதில் அவரிடம் கேட்கும் பொழுது படங்களில் சாதாரணமாக நடிப்பது கஷ்டமாக இருக்கிறதா? அல்லது கவர்ச்சியாக நடிப்பது கஷ்டமாக இருக்கிறதா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த திரிஷா இரண்டுமே கஷ்டமாகத்தான் இருக்கிறது.
சாதாரணமாக நடிப்பதை விடவும் கவர்ச்சியாக நடிப்பது அதிக கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் நடிகைகளுக்கு வேறு வழியில்லை இரண்டையுமே செய்துதான் ஆக வேண்டி இருக்கிறது என்று கூறியிருக்கிறார் திரிஷா.








